IND vs PAK : முக்கிய மேட்ச்ல ஷமியை எடுக்காம தப்பு பண்ணீட்டீங்க, ரோஹித் – டிராவிட்டை விளாசிய 2 முன்னாள் வீரர்கள்

- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 2ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இலங்கையின் பல்லக்கேல் நகரில் துவங்கிய முக்கியமான லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் மழை வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து துவங்கிய போட்டியில் எதிர்பார்த்தது போலவே அரை மணி நேரத்தில் வந்த மழை உடனடியாக ஒதுங்கிய நிலையில் 11 (22) ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை பெற்ற கேப்டன் ரோகித் சர்மாவை 5வது ஓவரின் கடைசி பந்தில் ஷாஹீன் அப்ரிடி க்ளீன் போல்ட்டாக்கினார்.

அதை விட அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியையும் 4 (7) ரன்களில் காலி செய்த அவர் எதிர்பார்த்ததை போலவே இந்தியாவின் 2 துருப்புச் சீட்டு வீரர்களை ஆரம்பத்திலேயே புதிய பந்தை ஸ்விங் செய்து அவுட்டாக்கி பாகிஸ்தானுக்கு அபாரமான துவக்கத்தை பெற்றுக் கொடுத்தார். போதாக்குறைக்கு அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 14 (9) ரன்களில் அவுட்டானதால் 51/3 என்ற மோசமான துவக்கத்தை பெற்ற இந்தியா இந்த போட்டியில் தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறது.

- Advertisement -

முன்னாள் வீரர்கள் காட்டம்:
முன்னதாக இந்த போட்டியில் பும்ரா, சிராஜ் ஆகியோருடன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஷமி அதிரடியாக நீக்கப்பட்டு பேட்டிங் ஆழத்தை அதிகரிப்பதற்காக ஷார்துல் தாகூர் சேர்க்கப்பட்டார். ஆனால் அது மிகப்பெரிய தவறு என்று சஞ்சய் மஞ்ரேக்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் விமர்சித்தது பின்வருமாறு. “நான் இந்த எண்ணத்திற்கு எதிராக நிற்கிறேன். அனைவரும் இங்கே பேட்டிங் ஆழத்தை பற்றி பேசுகிறார்கள்”

“ஆனால் ஷமியை விட தாகூர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து விடுவாரா? இது போன்ற ஒரு மைதானத்தில் ஷமியை உள்ளே கொண்டு வருவதற்காக நான் பேட்டிங் ஆழத்தைப் பற்றி கவலைப்பட மாட்டேன். இந்த மைதானத்தில் இந்தியா 3 தரமான வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியிருக்க வேண்டும். இது அணியில் யாருக்கும் பாதுகாப்பான இடமில்லை என்பதை காட்டுகிறது. ஒருவேளை வேண்டுமானால் நீங்கள் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் அவரை கொண்டு வந்திருக்கலாம்” என்று கூறினார்.

- Advertisement -

அதே நிகழ்ச்சியில் பேசிய ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்தியூ ஹெய்டன் கூறியது பின்வருமாறு. “100% ஏற்றுக்கொள்கிறேன். ஷமி நிச்சயம் இந்த அணியில் விளையாடியிருக்க வேண்டும். அவர் மட்டும் தான் இப்பபோட்டியில் இந்திய அணியில் குறையாக இருக்கிறார்” என்று கூறினார். அவர்கள் கூறுவது பாகிஸ்தான் அணியில் அப்ரிடி, ரவூப், நாசீம் 3 தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கும் நிலையில் இந்தியா பும்ரா, சிராஜ் ஆகிய 2 முதன்மை வேகப்பந்து வீச்சாளர்கள் போதும் என்ற முடிவுடன் களமிறங்கியுள்ளது பின்னடைவை ஏற்படுத்தலாம்.

இதையும் படிங்க: வீடியோ : சொன்ன மாதிரியே ரோஹித், விராட் கோலியை செஞ்சு விட்ட ஷாஹீன் அப்ரிடி – இந்தியா திணறல், ரசிகர்கள் கவலை

அத்துடன் தாக்கூர் ரன்களை வாரி வழங்குபவர் என்பதுடன் பேட்டிங்கிலும் கேரண்டியாக ரன்களை அடிப்பார் என்று சொல்ல முடியாது. மறுபுறம் பல்லக்கேல் போன்ற பவுன்ஸ், சாதகமான மைதானத்தில் ஷமி மிகவும் நேர்த்தியாக வீசக்கூடிய மிகப்பெரிய அனுபவத்தை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement