அந்த ஒரு தோல்வியால் நொறுங்கிப் போய் தூஙகமல் தவித்தேன் – ஜாம்பவான் கபில் தேவ் ஆதங்கம்

kapil dev
- Advertisement -

வரும் ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை நடைபெறுகிறது. வரலாற்றில் 15ஆவது முறையாக நடைபெறும் இந்த தொடரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த டாப் 6 அணிகள் மோதுகின்றன. வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த தொடரில் 6 அணிகள் பங்கேற்றாலும் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இவ்விரு அணிகளும் கடந்த பல வருடங்களாக எல்லை பிரச்சினை காரணமாக இது போன்ற ஆசிய மற்றும் உலக கோப்பையில் மட்டும் மோதுகின்றன.

அதனால் இப்போட்டிக்கான மவுசு எகிறியுள்ள நிலையில் கடைசியாக இதே துபாய் மைதானத்தில் இவ்விரு அணிகளும் மோதிய போது வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவை உலகக் கோப்பையில் தோற்கடித்த பாகிஸ்தான் சரித்திரத்தை மாற்றி எழுதியது. எனவே அவமானத்தை சந்தித்த இந்தியா இம்முறை அதற்கு தக்க பதிலடி கொடுத்து பழி தீர்க்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் அண்டை நாடுகள் என்பதால் இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை வெறும் போட்டியாக பார்க்காமல் கௌரவமாக கருதி அதில் வெற்றி பெறுவதற்காக காலம் காலமாக முழுமூச்சுடன் போராடி வருகின்றன.

- Advertisement -

மறக்கமுடியாத சிக்ஸர்:
அதனால் இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் ஆக்ரோசமாக மோதிக் கொள்வதால் இவ்விரு அணிகளும் மோதும் போட்டிகளில் அனல் பறக்கும் என்பதாலேயே இவ்வளவு எதிர்பார்ப்பு நிலவுகிறது. அந்த வகையில் வரலாற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் காலத்துக்கும் மறக்க முடியாத நிறைய பரபரப்பான போட்டிகளில் மோதியுள்ளன. அதில் கடந்த 1986இல் நடைபெற்ற ஆஸ்ட்ரல்-ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியை அந்தக் காலத்து இந்திய ரசிகர்களால் இப்போதும் மறக்கவே முடியாது.

சார்ஜாவில் நடைபெற்ற அந்த தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஸ்ரீகாந்த் 75, சுனில் கவாஸ்கர் 92, திலிப் வெங்சர்க்கார் 50 ஆகிய டாப் 3 பேட்ஸ்மேன்களின் அதிரடியால் 280 ரன்களை எடுக்க காத்திருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் வாசிம் அக்ரம் அடுத்தடுத்த விக்கெட்டுகளை எடுத்ததால் 245/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதை துரத்திய பாகிஸ்தானுக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் மிடில் ஆர்டரில் நங்கூரமாக பேட்டிங் செய்த ஜாவேத் மியாண்தத் சதமடித்து வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

தூங்கவே இல்ல:
அதனால் செட்டிலாகி நல்ல பார்மில் இருந்த அவர் கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட போது குறிப்பாக கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது இப்போதைய இந்திய தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா வீசிய ஃபுல் டாஸ் பந்தில் ப்ரம்மாண்ட சிக்சர் அடித்து திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அந்த காலத்தில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெறுவதெல்லாம் மிகப்பெரிய சாதனையிலும் சாதனை என்பதால் பாகிஸ்தான் வரலாற்று வெற்றி சுவைத்து கோப்பையை வென்றது. மறுபுறம் கடைசி நேரத்தில் சுமாராக செயல்பட்ட இந்தியா வாழ்நாள் வேதனையை சுமந்து வருகிறது.

இந்நிலையில் அந்த போட்டியில் தோல்வியடைந்ததை இப்போது நினைத்தாலும் வேதனையாக இருப்பதாகத் தெரிவிக்கும் அப்போட்டியில் கேப்டனாக செயல்பட்ட ஜாம்பவான் கபில் தேவ் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். அந்த வரலாற்று போட்டியின் நினைவுகளை ஸ்டார் ஸ்போர்ட் தொலைக்காட்சியில் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் பகிர்ந்து பேசியது பின்வருமாறு :

- Advertisement -

“அந்த புகழ்பெற்ற போட்டியில் நீங்கள் (இந்தியா) 270 ரன்களை எடுக்க இருந்தீர்கள். ஆனால் கடைசியில் நான் 3 அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்ததால் 245 ரன்கள் மட்டுமே அடித்தீர்கள்” எனக்கூறினார். அதற்கு பதிலளித்து கபில் தேவ் பேசியது பின்வருமாறு. “நாங்கள் கடைசி ஓவரில் 12 – 13 ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். அந்த காலத்தில் அதை அடிப்பது என்பது அசாத்தியமான ஒன்றாகும்.

அந்த பரபரப்பான கடைசி ஓவரை நான் சேட்டேன் சர்மாவிடம் நம்பி வழங்கினேன். இருப்பினும் இப்போதும் நான் அதை அவருடைய தவறாக எண்ணவில்லை. அவர்களுக்கு வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட போது வேறு வழியில்லை என்பதால் நாங்கள் யார்க்கர் வீசலாம் என்று முடிவெடுத்தோம்”

இதையும் படிங்க : மெக்கல்லம் மாதிரி அவ்ளோ நம்பிக்கையா யாரும் பேசமாட்டாங்க – கொல்கத்தா அணியின் இளம்வீரர் புகழாரம்

“அவர் தன்னுடைய சிறந்தவற்றை முயற்சித்தார், நாங்களும் முயற்சித்தோம். ஆனால் அது லோ ஃபுல் டாஸாக மாறியதால் தனது பின்னங்காலில் மியான்தத் சரியாக அடித்துவிட்டார். அதை இப்போது நினைத்தாலும் எங்களால் தூங்க முடியாது. அந்தத் தோல்வி அடுத்த 4 வருடத்திற்கு எங்களது அணியின் தன்னம்பிக்கையை தகர்த்தது. அதிலிருந்து கம்பேக் கொடுப்பது மிகவும் கடினமாக இருந்தது” என்று கூறினார்.

Advertisement