ஆசிய கோப்பை : 37 வயதாகிவிட்டதால் இதுதான் கடைசி சான்ஸ், தினேஷ் கார்த்திக்-க்கு பாக் வீரர் விடுத்த வேண்டுகோள்

Dinesh-Karthik
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையை வெல்வதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ள இந்தியா அடுத்ததாக வரும் ஆகஸ்ட் 27இல் துவங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பையில் களமிறங்குகிறது. ஐக்கிய அரபு நாடுகளில் வரலாற்றில் 15வது முறையாக நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கேஎல் ராகுல், விராட் கோலி போன்ற நட்சத்திரங்களுடன் சூர்யகுமார் யாதவ், புவனேஸ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, அரஷ்தீப் சிங் என சமீபத்திய டி20 தொடர்களில் அசத்திய சீனியர் மற்றும் இளம் வீரர்களுக்கு இந்த அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Dinesh Karthik Ashwin

- Advertisement -

இதுவரை நடைபெற்ற தொடர்களில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் உலக கோப்பைக்கான இறுதி கட்ட அணி இந்த ஆசிய கோப்பையிலிருந்து தான் தேர்வு செய்யப்பட உள்ளது. அந்த நிலைமையில் இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சீனியர் வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் சேர்க்கப்பட்டதற்கு நிறைய முன்னாள் வீரர்கள் கேள்விகளும் எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் ஆகிய விக்கெட் கீப்பிங் செய்யும் இளம் வீரர்கள் இருக்கும் போது பினிஷிங் செய்வதற்காக மட்டும் தினேஷ் கார்த்திக்க்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என்று தமிழகத்தின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் போன்றவர்கள் தெரிவிக்கின்றனர்.

சாதிப்பாரா டிகே:
ஆனால் ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக அவதரித்ததால் இந்திய கேரியர் முடிந்து விட்டதாக கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் டி20 கிரிக்கெட்டில் தம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் கடினமான முயற்சிகளையும் பயிற்சிகளையும் எடுத்து ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணிக்காக லோயர் மிடில் ஆர்டரில் 330 ரன்களை 183.33 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய தன்னை சிறந்த பினிஷர் என்று நிரூபித்தார்.

Dinesh Karthik vs RSA

அதன் காரணமாக 3 வருடங்கள் கழித்து இந்திய அணிக்கு தேர்வான அவர் தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் அசத்தலாக செயல்பட்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அசத்தினார். கம்பேக் கொடுத்தபின் இதுவரை 13 இன்னிங்ஸில் விளையாடியுள்ள அவர் 3 இன்னிங்ஸ்ஸில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு செயல்பட்டு 2 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ளார். மேலும் இந்த 13 இன்னிங்சில் 12 முறை 15வது ஓவருக்குப்பின் களமிறங்கும் வாய்ப்பை பெற்ற அவர் அதில் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் ஆசிய கோப்பையில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

கடைசி சான்ஸ்:
ஆனால் சூரியகுமார், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா போன்றவர்களும் பினிஷிங் செய்யக் கூடியவர்கள் என்பதால் வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்ற விமர்சனங்களை சந்தித்துள்ள தினேஷ் கார்த்திக் அதை உடைப்பதற்கு இந்த ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதில் சிறப்பாக செயல்பட்டால் தான் உலகக்கோப்பையில் தேர்வாக முடியும் என்ற இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது.

DInesh Karthik

இந்நிலையில் டி20 உலக கோப்பையில் இடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்று கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்தில் பாதி தூரத்தை கடந்துவிட்ட தினேஷ் கார்த்திக் அதை உறுதி செய்ய ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட வேண்டுமென்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது 37 வயதைக் கடந்து விட்ட காரணத்தால் அடுத்த உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு நிச்சயம் கிடைக்காது எனக்கூறும் அவர் இந்த கடைசி வாய்ப்பில் சாம்பியன் பட்டம் வெல்லும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு பெருமை சேர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

- Advertisement -

இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “2022 டி20 உலகக்கோப்பைக்கு பின் தினேஷ் கார்த்திக் தொடர்ந்து விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை. எனவே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பிடிப்பதற்கு இந்த ஆசிய கோப்பை அவருக்கு மிகவும் முக்கியமானதாகும். அவருடைய பிட்னெஸ், பார்ம், போட்டியை வெற்றிகரமாக பினிஷிங் செய்யும் விதம் போன்றவற்றில் தேர்வுக்குழு உட்பட அனைவரும் தங்களது கண்களை வைத்துள்ளார்கள்”

இதையும் படிங்க : IND vs ZIM : ஜிம்பாப்வே தொடரில் அசத்துனா மட்டும் போதும். உங்களுக்கு டீமில் இடமுண்டு – பி.சி.சி.ஐ வாக்குறுதி

“மேலும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா போன்ற இதர பினிசிங் வீரர்களும் உள்ளனர். எனவே இந்து ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்டாலும் தினேஷ் கார்த்திக்க்கு இது தான் கடைசி உலகக்கோப்பையாக இருக்கும்” என்று கூறினார். அவர் கூறுவதுபோல விராட் கோலி, ரோகித் சர்மா போன்றவர்களே கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருவதால் 37 வயதை கடந்துள்ள தினேஷ் கார்த்திக் இந்த ஆசிய கோப்பையை விட்டால் அடுத்த டி20 உலகக் கோப்பையில் விளையாட முடியாது என்றே கூறலாம்.

Advertisement