IND vs ZIM : ஜிம்பாப்வே தொடரில் அசத்துனா மட்டும் போதும். உங்களுக்கு டீமில் இடமுண்டு – பி.சி.சி.ஐ வாக்குறுதி

Deepak-Chahar
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடுத்ததாக இம்மாத இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே ரோகித் சர்மாவின் தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

Asia-Cup

- Advertisement -

அதன்படி புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் ஆகிய மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வுக்கு முன்பாகவே பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர்களது பெயர் இந்த தொடரில் பரிசீலிக்கப்படவில்லை என பிசிசிஐ தெளிவாக கூறிவிட்டது. இதன் காரணமாக தற்போது இந்த ஆசியகோப்பை தொடருக்கான இந்திய அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

அவர்களை தவிர்த்து ஹார்டிக் பாண்டியா வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக இருக்கிறார். ஆனால் இப்படி இந்த மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் வைத்து இந்திய அணி இந்த ஆசிய கோப்பையில் எவ்வாறு செயல்பட போகிறது என்று பலரும் தங்களது கருத்துக்களை கேள்விகளாக எழுப்பி வருகின்றனர்.

Deepak Chahar

இந்நிலையில் இந்திய அணியில் ஸ்டாண்ட் பை வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள தீபக் சாகர் ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக முதன்மை அணிலும் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஷிகார் தவான் தலைமையில் ஜிம்பாப்வே நாட்டிற்கு பயணிக்கும் இளம் இந்திய அணியுடன் தீபக் சாஹரும் செல்கிறார். அந்த தொடரில் இடம்பெற்றுள்ள அவர் அந்த மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் ஆசியக் கோப்பை தொடருக்கான அணியில் அவருக்கு இடம் உண்டு என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் சமீபத்தில் இந்திய அணிக்காக அறிமுகமாகி ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் ஆவேஷ் கானின் பந்துவீச்சு மீது அதிக அளவு விமர்சனங்கள் இருந்து வருகிறது. ஆனால் அர்ஷ்தீப் சிங் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் தான் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : கடந்த ஆசிய கோப்பையிலிருந்து இம்முறை காணாமல் போன 6 இந்திய வீரர்களின் பட்டியல்

எனவே மோசமான பார்மில் இருக்கும் ஆவேஷ் கானிற்கு பதிலாக தீபக் சாகருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் ஜிம்பாப்வே தொடரில் தீபக் சாகர் தனது சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தி விட்டால் நிச்சயம் ஆவேஷ் கான் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக அணியில் தீபக் சாகர் இடம் பெறுவது உறுதி என்று கூறப்படுகிறது.

Advertisement