கடந்த ஆசிய கோப்பையிலிருந்து இம்முறை காணாமல் போன 6 இந்திய வீரர்களின் பட்டியல்

- Advertisement -

ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஆசிய கோப்பை வரும் ஆகஸ்ட் 27 ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. வரலாற்றில் 15ஆவது முறையாக நடைபெறும் இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் உட்பட ஆசிய கண்டத்தின் டாப் 6 அணிகள் மோதுகின்றன. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இம்முறை இந்த தொடர் 20 ஓவர் போட்டிகளாக நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

Asia-Cup

- Advertisement -

அதில் கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோர் திரும்பியுள்ள நிலையில் சூர்யகுமார் யாதவ், அரஷ்தீப் சிங் போன்ற இளமையும் அனுபவமும் நிறைந்த வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். வரலாற்றில் 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா கடைசியாக கடந்த 2018இல் இதே துபாயில் 50 ஓவர் தொடராக நடைபெற்ற ஆசிய கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் வங்கதேசத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

காணாமல்போன வீரர்கள்:
அந்த வகையில் தற்போது நடப்புச் சாம்பியனாக களமிறங்கும் இந்தியா இம்முறையும் பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளை தோற்கடித்து 8வது முறையாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கபடுகிறது. முன்னதாக 4 வருடங்களுக்கு முன்பு கடைசியாக ரோகித் சர்மா தலைமையில் விளையாடிய ஆசிய கோப்பை இந்திய அணியிலிருந்து தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் சில வீரர்களிடம் பிடிக்காதது மட்டுமல்லாமல் இந்திய கிரிக்கெட்டிலிருந்தே காணாமல் போய்விட்டனர். அதைப் பற்றி பார்ப்போம்.

Khaleel

6. கலீல் அஹமத்: ராஜஸ்தானை சேர்ந்த இவர் இடது கை வேகப்பந்து வீச்சாளராக ஐபிஎல் தொடரில் அசத்தியதால் கடந்த செப்டம்பர் 18இல் இதே ஆசிய கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். அப்போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்த போதிலும் அடுத்த போட்டியிலேயே முதன்மை பவுலர்கள் அணிக்கு வந்ததால் பெஞ்சில் அமர வைக்கப்பட்ட இவருக்கு அதன்பின் 2019 வரை 11 போட்டிகளில் வாய்ப்பளிக்கப்பட்டது.

- Advertisement -

இதற்கிடையே 14 டி20 போட்டிகளில் விளையாடிய இவர் 8.83 என்ற சுமாரான எக்கனாமியில் பந்து வீசியதால் கழற்றி விடப்பட்டார். அவருக்குப் பின் நிறைய இளம் வீரர்கள் வந்துள்ளதால் இந்திய அணியிலிருந்து காணாமல் போயுள்ள இவர் 24 வயது மட்டுமே நிரம்பியுள்ள காரணத்தால் வரும் காலங்களில் கடினமாக உழைத்தால் மீண்டும் கம்பேக் கொடுக்கலாம்.

kaul

5. சித்தார்த் கௌல்: பஞ்சாப்பை சேர்ந்த இவரும் ஒரு கட்டத்தில் ஐபிஎல் தொடரில் அசத்தியதால் 2018இல் அறிமுகமாகி அந்த வருடம் நடந்த ஆசிய கோப்பையில் இடம் பிடித்திருந்தார். இருப்பினும் முதன்மை பவுலர்கள் இருந்ததால் வாய்ப்பு பெறாத இவர் 2021 வரை 3 ஒருநாள் போட்டிகளிலும் 2 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரிலும் சுமாராகவே செயல்பட்டதால் அதன்பின் வாய்ப்பு பெறாத இவர் 32 வயதை கடந்து விட்டதால் இனி இந்திய அணியில் நுழைவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.

Manish-Pandey

4. மனிஷ் பாண்டே: ஐபிஎல் தொடரில் ஆரம்ப காலத்தில் அதிரடியாக பேட்டிங் செய்ததால் 2015இல் அறிமுகமான இவருக்கு விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இருந்ததால் தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் கிடைத்த வாய்ப்புகளிலும் சுமாராகவே செயல்பட்ட இவர் 29 ஒருநாள் போட்டிகளில் வெறும் 566 ரன்களை 33.29 என்ற சுமாரான சராசரியிலேயே எடுத்துள்ளார்.

- Advertisement -

நாட்கள் செல்ல செல்ல ஸ்ட்ரைக் ரேட் குறைந்து சமீப காலங்களில் ஐபிஎல் தொடரில் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடுவதால் புறக்கணிக்கப்படும் இவர் 39 டி20 போட்டிகளில் 709 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். கடைசியாக கடந்த 2021இல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சுமாராக விளையாடிய இவர் 2018 ஆசிய கோப்பை இந்திய அணியிலும் சுமாராகவே செயல்பட்டார். 32 வயதை கடந்துவிட்ட இவரும் இனிவரும் காலங்களில் இந்திய அணியில் மீண்டும் விளையாடுவது கடினமாமானதாக பார்க்கப்படுகிறது.

Kedar-Jadhav

3. கேதார் ஜாதவ்: நல்ல மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் எதிரணிகள் பார்ட்னர்ஷிப் போட்டால் அவர்களை பிரிக்கும் பகுதிநேர சுழல்பந்து வீச்சாளராகவும் அசத்திய இவர் 2014இல் அறிமுகமாகி 2019 உலகக்கோப்பை அணியில் இடம் பிடிக்கும் அளவுக்கு 2018 வாக்கில் அசத்தலாக செயல்பட்டார்.

அந்த வகையில் 2018 ஆசிய கோப்பையில் இடம்பிடித்து ஓரளவு நன்றாகவே செயல்பட்ட இவர் அதன்பின் பார்மை இழந்து ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடியதால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். கடைசியாக கடந்த 2020இல் விளையாடிய இவர் இந்தியாவுக்காக 73 ஒருநாள் போட்டிகளிலும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 37 வயதை தொட்டு விட்டதால் இனிமேல் இந்தியாவின் பக்கம் திரும்பவே முடியாது.

rayudu

2. அம்பத்தி ராயுடு: இவரை கழற்றி விட்ட காரணத்தாலேயே 2019 உலக கோப்பையில் இந்தியா தோல்வியுற்றது என்பதே உண்மையாகும். அந்தளவுக்கு 2013இல் அறிமுகமாகி 2018 வாக்கில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்திய இவர் 2019 உலகக்கோப்பையில் 4வது இடத்தில் விளையாட தகுதியானவராக இருந்தார்.

ஆனால் அந்த இடத்தில் விளையாடுபவர் பந்துவீச தெரிந்தவராக இருக்க வேண்டும் என்று முட்டாள்தனமாக கருதிய தேர்வுக்குழு இவரை கழற்றி விட்டது. அதனால் மனமுடைந்து ட்வீட் போட்ட இவரை பழிவாங்க நினைத்த தேர்வுக்குழு அதன்பின் வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றியது. அதனால் மேலும் மனமுடைந்த அவர் 33 வயதிலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2018 ஆசிய கோப்பையில் சிறப்பாகவே செயல்பட்டு அவர் இந்தியாவுக்காக 55 ஒருநாள் போட்டிகளில் 1694 ரன்களை 47.07 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ளார்.

1. ஷிகர் தவான்: ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் அசத்தலாக செயல்படும் திறமை பெற்றுள்ள இவர் 2013 – 2019 வரை ரோகித் சர்மாவின் மானசீக ஓப்பனிங் பார்ட்னராக விளையாடினார். ஆனால் 2019 உலகக் கோப்பைக்கு பின் சந்தித்த காயத்தால் இவரது இடத்துக்கு வந்த கேஎல் ராகுல் அவரை விட சிறப்பாக செயல்பட்டு அந்த இடத்தை தனதாக்கிக்கொண்டார்.

அதனால் டி20 அணியில் கழட்டிவிடப்பட்ட இவருக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் ஜிம்பாவே போன்ற 2-வது தர தொடரில் வாய்ப்பளிக்கப்படுகிறது. இருப்பினும் 2018 ஆசிய கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்று இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய இவர் இப்போதும் இந்த தொடரில் விளையாட தகுதியானவராகவே உள்ளார்.

Advertisement