ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான நிலையை சந்தித்த இங்கிலாந்து அணி – நடப்பு சாம்பியனுக்கு ஏற்பட்ட பரிதாபம்

ENG
- Advertisement -

கடந்த 2019-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணியானது முதல் முறையாக 50 உலகக் கோப்பை தொடரை கைப்பற்றி நடப்பு சாம்பியனாக தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2023-ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை தொடரில் அடியெடுத்து வைத்தது. இந்த தொடரில் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் இங்கிலாந்து அணி நிச்சயம் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணியாக பார்க்கப்பட்டது.

ஆனால் இதுவரை இங்கிலாந்து அணி தாங்கள் விளையாடிய 4 போட்டிகளில் மூன்று தோல்விகளை சந்தித்து தற்போது இக்கட்டான நிலையை சந்தித்துள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிராக மட்டும் வெற்றியைக் கண்ட இங்கிலாந்து அணி நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இன்று நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை சந்தித்து தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்து மோசமான நிலையை சந்தித்துள்ளது.

- Advertisement -

அதோடு அக்டோபர் 21-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் 20-ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து அணியானது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையையும் சந்தித்து பரிதாப நிலையை அடைந்துள்ளது.

அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களை குவிக்க பின்னர் 400 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

- Advertisement -

இந்த இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியானது கிட்டத்தட்ட இலக்கை நோக்கி போராடியாவது தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 22 ஓவர்களில் 170 ரன்களை மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி ஆல் அவுட்டாகி மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. அந்த வகையில் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி பெற்ற தோல்வியாக இந்த தோல்வி அமைந்துள்ளது.

இதையும் படிங்க : நியாயமா இந்த விருது அவருக்கு தான் போயிருக்கணும். சதம் அடித்தும் பெரிய மனசை காட்டிய – ஹென்றிச் கிளாசன்

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அவர்கள் 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. அதோடு உலககோப்பை வரலாற்றில் அடைந்த மிகப்பெரிய தோல்வியாகவும் இந்த தோல்வி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியில் அதிரடி ஆட்டக்காரர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் நிரம்பி இருப்பதால் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் நான்கு போட்டிகளில் 3 தோல்விகளை பெற்று மோசமான நிலையை சந்தித்துள்ளது யாரும் எதிர்பாராத ஒன்று என்றே கூறலாம்.

Advertisement