ட்ராவிட்டிடம் பேசுனேன்.. இனிமேல் தான் அதை உண்மையா பாக்க போறீங்க.. இந்திய அணியை எச்சரித்த மெக்கல்லம்

Brendon Mccullam 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்ற வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. அதனால் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அதிரடியாக விளையாடி இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று எச்சரித்த இங்கிலாந்து அதை செயலிலும் செய்து காட்டி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

ஆனால் இரண்டாவது போட்டியில் சுதாரித்து விளையாடிய இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1 – 1* என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. அந்த வகையில் கம்பேக் கொடுத்துள்ள இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் அவ்வளவு எளிதாக வீழ்த்தி விட முடியாது என்பதை இங்கிலாந்துக்கு காண்பித்துள்ளது. அதனால் அடுத்து வரும் போட்டிகளில் வென்று இந்தியா கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

- Advertisement -

உண்மையான ஆட்டம்:
மறுபுறம் 3வது போட்டிக்கு முன்பாக 10 நாட்கள் இடைவெளி இருப்பதால் அபுதாபிக்கு சென்றுள்ள இங்கிலாந்து அங்கு ஸ்பெஷல் மேற்கொண்டு மீண்டும் இந்தியாவுக்கு வர உள்ளது. இந்நிலையில் அபுதாபியில் தேவையான பயிற்சிகளை எடுத்து மூன்றாவது போட்டியிலிருந்து புத்துணர்ச்சியுடன் களமிறங்கி தங்களுடைய பஸ்பால் ஆட்டத்தை இன்னும் அதிரடியாக விளையாடி இந்தியாவை தோற்கடிப்போம் என்று பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் மறைமுக எச்சரிக்கையை கொடுத்துள்ளார்.

இது பற்றி அவர் டெலிகிராப் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “இந்த பயிற்சி மிகவும் ரிலாக்ஸாக இருக்கும். அதில் அதிக பயிற்சிகள் இருக்காது. ஏற்கனவே அபுதாபியில் கடினமாக வேலை செய்துள்ள எங்களுடைய வீரர்கள் நிறைய கிரிக்கெட்டை விளையாடிய பின் மீண்டும் இங்கே வந்துள்ளனர். அதே போல நான் இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் பேசினேன். அப்போது இந்திய வீரர்கள் தங்களுடைய சொந்த மண்ணில் கடினமான பயிற்சிகளை எடுப்பதாக அவர் சொன்னார்”

- Advertisement -

“எங்களுடைய சொந்த ஊர் தூரத்தில் இருப்பதால் அபுதாபியை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். அங்கே எங்களுடைய குடும்பத்துடன் சில நாட்கள் செலவிட உள்ளோம். அதன் பின் 3வது போட்டி நடக்கும் ராஜ்கோட் நகருக்கு செல்லும் நாங்கள் தோள்பட்டையை இறக்கி கடினமான அதிரடியை வெளிப்படுத்தி விளையாட உள்ளோம். 1 – 1 என்ற கணக்கில் தற்போதுள்ள இந்த தொடரில் நாங்கள் இன்னும் போட்டியில் இருக்கிறோம்”

இதையும் படிங்க: நாக் அவுட்டில் 32/4.. வெறும் 2 விக்கெட்.. உடைந்த தெ.ஆ.. தூக்கிய குட்டி சச்சின்.. இந்தியா ஃபைனல் சென்றது எப்படி?

“கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம். ஆம் இரண்டாவது போட்டியில் நாங்கள் தோல்வியின் பக்கம் வந்தோம். ஆனால் முதல் போட்டியில் வெற்றியின் கோட்டை தாண்டினோம். இரண்டாவது போட்டியில் தோற்றது நல்லதல்ல. இருப்பினும் இந்தியா வெற்றிக்கு தகுதியானவர்கள் என்று நாங்கள் விலகிச் சென்றோம்” என்று கூறினார். தொடர்ந்து மூன்றாவது போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement