எல்லாருக்கும் அது சமம் தானே.. இந்தியாவில் சாக்கு சொல்லும் கலாச்சாரத்தை நிறுத்துங்க.. நாசர் ஹுசைன்

nasser hussain
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வலுவான இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்குகிறது. அதில் இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா வெல்வதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது என்றே சொல்லலாம்.

ஏனென்றால் வெளிநாடுகளில் தடுமாறினாலும் சொந்த மண்ணில் மிரட்டக்கூடிய இந்தியா கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது. அந்த வரிசையில் இம்முறையும் இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஆனால் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக ரன்கள் அடிக்கும் யுக்தியை கையாண்டு வரும் இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது.

- Advertisement -

சாக்கு சொல்லாதீங்க:
எனவே அந்த அணுகுமுறையை பயன்படுத்தி இம்முறை இந்தியாவை அதன் சொந்த ஊரில் மண்ணை கவ்வ வைப்போம் என்று இங்கிலாந்து அணியினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக 2021 சுற்றுப்பயணத்தில் இந்தியா வெல்வதற்கு வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான பிட்ச்களை அமைத்திருந்ததாக விமர்சித்த இங்கிலாந்து அணியினர் முதல் போட்டியில் வென்றும் கடைசியில் 3 – 1 (4) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தனர்.

அதனால் இம்முறை இந்தியாவின் மைதானங்களை பற்றி குறை சொல்லும் கலாச்சாரத்தை இங்கிலாந்து நிறுத்த வேண்டுமென முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கூறியுள்ளார். அத்துடன் பிட்ச் இரு அணிகளுக்கும் சமமாக கொடுக்கப்படுவதால் அதில் சிறப்பாக விளையாடி வெல்ல வேண்டுமே தவிர தோற்றால் அதை சாக்காக சொல்லக்கூடாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சாக்கு சொல்லும் கலாச்சாரத்தை பின்பற்றாமல் இருப்பது இங்கிலாந்துக்கு மிகவும் முக்கியமானது. ஒருவேளை கடந்த டெஸ்ட் தொடரை போல் இம்முறையும் இந்திய மைதானங்கள் பெரிய அளவில் சுழலுக்கு சாதகமாக இருந்தால் இருக்கட்டும். சொல்லப்போனால் சென்னையில் கடந்த டெஸ்ட் தொடரில் அது போன்ற பிட்ச்சில் இங்கிலாந்தும் முதல் போட்டியில் வென்றது”

இதையும் படிங்க: இங்கிலாந்து தொடர் முடிஞ்சதும்.. அவர் நிரந்தர இடம் பிடிப்பாரு பாருங்க.. இந்திய வீரர் மீது கவாஸ்கர் நம்பிக்கை

“எனவே பிட்ச் என்பது இரு அணிகளுக்கும் ஒன்றானது. எனவே அது நியாயமற்றது அல்லது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல என்பது போன்ற பேச்சுக்கள் நம்மிடம் இருக்கக் கூடாது” என்று கூறினார். முன்னதாக இம்முறை இந்திய மைதானங்கள் முதல் நாளிலிருந்தே சுழலுக்கு சாதகமாக இருந்தாலும் புகார் செய்ய மாட்டோம் என்று இங்கிலாந்து வீரர் பென் டுக்கெட் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement