பஸ்பால் பின்னாடி ஒளியாதீங்க.. அந்த 2 இந்திய வீரர்களை பாத்து கத்துக்கோங்க.. இங்கிலாந்தை விளாசிய நாசர் ஹுசைன்

Nasser Hussain 6
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து அதற்கடுத்த 3 போட்டிகளில் ஹர்ட்ரிக் தோல்விகளை பதிவு செய்தது. அந்த வகையில் பஸ்பால் அணுகுமுறையை பின்பற்றி அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் சொதப்பிய அந்த அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்து தலை குனிந்தது.

அந்த நிலையில் மார்ச் 7ஆம் தேதி தரம்சாலாவில் துவங்கிய கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 218 ரன்களுக்கு சுருண்டது. குறிப்பாக ஜாக் கிராவ்லி 79 ரன்கள் எடுத்ததால் 100/1 என்ற வலுவான நிலையில் இருந்த இங்கிலாந்தை பின்னர் அபாரமாக பந்து வீசி சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 4 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஜெய்ஸ்வால் 57, ரோஹித் சர்மா 52*, கில் 26* ரன்கள் எடுத்த உதவியுடன் முதல் நாள் முடிவில் 135/1 ரன்கள் எடுத்து வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது.

- Advertisement -

பஸ்பால் என்ற பெயரில்:
இந்நிலையில் இப்படி சொதப்பலாக விளையாடிவிட்டு இனிமேலும் பஸ்பால் என்ற பெயரில் ஒளிந்து கொள்ள வேண்டாமென பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியை முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் அஸ்வின், குல்தீப் போன்ற இந்திய வீரர்களை பார்த்து முன்னேறுவதற்கான வழியை கற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய பின்வருமாறு.

“ஜாக் கிராவ்லி தொடர்ச்சியாக ரன்கள் அடிக்கிறார். ஆனால் அவர் 50 – 70 ரன்களில் அவுட்டாகி விடுகிறார். இந்த தொடரில் அவர் 6வது முறையாக 70 ரன்களில் அவுட்டாகியுள்ளார். ஜானி பேர்ஸ்டோ ஒவ்வொரு முறையும் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாட முயற்சித்து 20 – 30 ரன்களில் ஆட்டமிழக்கிறார். பென் ஸ்டோக்ஸ் இந்த தொடர் முழுவதும் பேட்டிங்கில் தடுமாறுகிறார். குல்தீப்பை சரியாக அடிக்காத அவர் கிரீஸில் மாட்டிக் கொள்கிறார். பென் ஃபோக்ஸ் மீண்டும் டெயில் எண்டர்களுடன் சிக்கினார்”

- Advertisement -

“நீங்கள் எந்த கேப்டன் அல்லது பயிற்சியாளர் தலைமையில் விளையாடினாலும் நாம் எப்படி சிறந்த வீரராக விளையாட வேண்டும் என்பது உங்களுடைய சொந்த சிந்தனையைப் பொறுத்து அமைய வேண்டும். இந்த சுற்றுப்பயணத்தின் முடிவில் அனைத்து வீரர்களும் தங்களை பார்த்து “பஸ்பால்” என்ற மனநிலையின் பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டாம் என்று இருப்பார்கள் என நம்புகிறேன். சொந்த விளையாட்டை முன்னேற்ற முயற்சியுங்கள்”

இதையும் படிங்க: ஒழுங்கா சொல்ற இடத்துல நில்லுங்கடா.. இளம்வீரர்களை சரியான இடத்தில் நிற்க வைத்த ரோஹித் – சுவாரசிய சம்பவம்

“குறிப்பாக பேட்டிங்கில் எப்படி வேலை செய்து முன்னேற வேண்டும் என்பது உங்களுடைய சொந்த வேலையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் எங்கே இருந்தாலும் பயிற்சியாளர் அல்லது கேப்டன் யாராக இருந்தாலும் 100 போட்டிகளில் விளையாடிய பின்பும் எப்போதும் தன்னை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் அஸ்வின் போன்றவரை பாருங்கள். நீங்க குல்தீப் யாதவை பாருங்கள். அவர் மீண்டும் ஒரு அற்புதமான நாளை கொண்டாடினார்” என்று கூறினார்.

Advertisement