இதற்கு முன் இங்கிலாந்து 399+ ரன்களை 4 ஆவது இன்னிங்சில் சேசிங் செய்துள்ளதா? – விவரம் இதோ

ENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் துவங்கிய இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 396 ரன்களை குவித்து அசத்தியது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 29 ரன்களை குவித்து அசத்தினார்.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 253 ரன்கள் மட்டுமே குவித்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் 143 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 255 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அந்த இலக்கினை துரத்தி வரும் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 67 ரன்கள் எடுத்திருக்கிறது.

- Advertisement -

இவ்வேளையில் இன்னும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 332 ரன்கள் தேவைப்படும் நிலையில் இங்கிலாந்து அணி நான்காம் நாள் ஆட்டத்தில் விளையாடாயிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டின் 4 ஆவது இன்னிங்சில் 300 ரன்களுக்கு மேல் அடிப்பது என்றாலே எப்போதுமே அது ஒரு பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிகரமாக இந்த இலக்கை துரத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க : கண்டிப்பா அதுக்காக அப்பா திட்டுவாரு.. நாளைக்கு எங்களோட திட்டம் இது தான்.. சதமடித்த கில் பேட்டி

மேலும் இதற்கு முன்னர் இதுபோன்ற பெரிய இலக்கினை அவர்கள் துரத்தி இருக்கிறார்களா? என்பது குறித்த புள்ளி விவரமும் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து அணி நான்காவது இன்னிங்ஸில் இதுவரை மூன்று முறை மட்டுமே 399+ ரன்களை குவித்துள்ளது. அப்படி குவித்தும் இங்கிலாந்து அணி தோல்வியையே சந்தித்திருக்கிறது. கடைசியாக இங்கிலாந்து அணி 1977-ஆம் ஆண்டுதான் நான்காவது இன்னிங்ஸில் 399+ ரன்கள் குவித்துள்ளது. எனவே நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பே அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement