கண்டிப்பா அதுக்காக அப்பா திட்டுவாரு.. நாளைக்கு எங்களோட திட்டம் இது தான்.. சதமடித்த கில் பேட்டி

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 2ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா யசஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 209 ரன்கள் குவித்த உதவியுடன் முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் எடுத்து அசத்தியது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 253 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 76, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 47 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்களை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 143 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் போராடி 255 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் சதமடித்து 104 ரன்கள் அடிக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டாம் ஹார்ட்லி 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

அப்பா திட்டுவாரு:
இறுதியில் 399 என்ற பெரிய இலக்கை துரத்தும் இங்கிலாந்து மூன்றாவது நாள் முடிவில் 67/1 ரன்கள் எடுத்துள்ளது. கைவசம் 9 விக்கெட்டுகளை வைத்துள்ள அந்த அணிக்கு இன்னும் 332 ரன்கள் தேவைப்படுவதால் வெற்றி இரு அணிக்கும் சமமாக இருக்கிறது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் இந்தியாவை காப்பாற்றினார் என்றால் இரண்டாவது இன்னிங்சில் சுப்மன் கில் 104 ரன்கள் குவித்து கை கொடுத்தார் என்றே சொல்லலாம்.

குறிப்பாக சமீப காலங்களாகவே தடுமாறி வருவதால் அணியிலிருந்து நீக்குமாறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் சதமடித்துள்ள அவர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். இருப்பினும் நன்கு செட்டிலான அவர் சதமடித்ததும் மோசமான ஷாட்டை அடித்து தன்னுடைய விக்கெட்டை பரிசளித்து ஏமாற்றத்துடன் சென்றார். இந்நிலையில் அதற்காக மைதானத்தில் இருந்து போட்டியை பார்த்த தன்னுடைய அப்பா திட்டுவார் என்று கூறும் கில் நாளை பிட்ச்சில் இருக்கும் ஈரப்பதத்தை பயன்படுத்தி வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதற்காக மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் உண்மையாக அங்கு ஆட்டத்தை நான் சற்று தவற விட்டேன். முதலில் எல்பிடபுள்யூ முறையில் அவுட்டான போது ஸ்ரேயாஸ் ஐயர் ரிவியூ எடுக்க சொன்னார். தேனீர் இடைவெளி வரை நான் 5 – 6 ஓவர்கள் விளையாடியிருக்க வேண்டும். பிட்ச் பேட்டிங் செய்வதற்கு ஓரளவு நன்றாக இருந்தது. இருப்பினும் பந்து எழும்பி வரும் போது அடிப்பது கடினமாக இருந்தது”

இதையும் படிங்க: 2 ஆவது இன்னிங்சில் அஷ்வினின் கைகெட்டும் தூரத்தில் காத்திருக்கும் பல சாதனைகள் – விவரம் இதோ

“அந்த ஷாட்டை அடித்ததற்காக அப்பா திட்டுவார் என்று நினைக்கிறேன். ஹோட்டலுக்கு திரும்பியதும் அதைப் பற்றி தெரிந்து கொள்வேன். என்னுடைய பெரும்பாலான போட்டிகளை அவர் பார்க்க அவர் வருவார். இப்போதைக்கு 70 – 30% வெற்றி எங்கள் பக்கம் இருப்பதாக கருதுகிறேன். நாளைய முதல் மணி நேரம் முக்கியமானது. குறிப்பாக காலையில் பிட்ச்சில் உள்ள ஈரப்பதம் பவுலர்களுக்கு இருக்கும் என்பதை பார்க்கிறோம்” என்று கூறினார்.

Advertisement