2 ஆவது இன்னிங்சில் அஷ்வினின் கைகெட்டும் தூரத்தில் காத்திருக்கும் பல சாதனைகள் – விவரம் இதோ

Ashwin
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி துவங்கிய இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தற்போது இந்திய அணியை வெற்றியை நோக்கி தங்களது வீறுநடையை போட்டு வருகிறது. இந்த போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணியானது 396 ரன்களை குவித்திருந்த வேளையில் இங்கிலாந்து அணி 253 ரன்கள் மட்டுமே குவித்தது.

அதனை தொடர்ந்து 143 ரன்கள் என்கிற முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி 253 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க 399 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களை குவித்துள்ளதால் எஞ்சியுள்ள இரண்டு நாள் ஆட்டங்களில் 332 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்த வாய்ப்பு காத்திருக்கிறது.

அந்த வகையில் இதுவரை இந்திய அணிக்காக 497 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள அஸ்வின் மேலும் 3 விக்கெட்டுகளை எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை பூர்த்தி செய்த இரண்டாவது இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைப்பார். இந்த பட்டியலில் ஏற்கனவே அணில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

இவ்வேளையில் இவர் 500 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இரண்டாவது சுழற்பந்து வீச்சாளராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சாதனையை படைப்பார். அதோடு இந்த இன்னிங்ஸில் இன்னும் ஐந்து விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினால் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 15 வருட சாதனை இலக்கு.. இங்கிலாந்து சரித்திரம் படைக்குமா? சென்னை மேஜிக்கை இந்தியா நிகழ்த்துமா

அதோடு 7 விக்கெட்டுகளை இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் கைப்பற்றும் பட்சத்தில் சொந்த மண்ணில் 350 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைக்க காத்திருக்கிறார். இவருக்கு முன்னதாக அணில் கும்ப்ளே இந்திய மண்ணில் 350 விக்கெட்டுகளை குவித்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி பல சாதனைகள் அஸ்வினுக்காக காத்திருக்கும் வேளையில் இரண்டாவது இன்னிங்சில் இதுவரை அஸ்வின் ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement