15 வருட சாதனை இலக்கு.. இங்கிலாந்து சரித்திரம் படைக்குமா? சென்னை மேஜிக்கை இந்தியா நிகழ்த்துமா

- Advertisement -

இந்தியா விளையாடும் இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த பெரிய தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அந்த சூழ்நிலையில் பிப்ரவரி இரண்டாம் தேதி துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து கடுமையான போராட்டத்திற்கு பின் 393 ரன்கள் குவித்து அசத்தியது.

இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா உட்பட அனைத்து வீரர்களும் 35 ரன்கள் கூட தாண்டாத நிலையில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து 209 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன், ரெஹன் அஹமத் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாட முயற்சித்தும் பின்னர் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் தடுமாற்றமாக விளையாடி 253 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

சாதிக்குமா இந்தியா:
அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 76, பென் ஸ்டோக்ஸ் 47 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 6, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 143 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 17, ஜெய்ஸ்வால் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

அதை தொடர்ந்து வந்த சுப்மன் கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் எதிர்ப்புறம் ஸ்ரேயாஸ் ஐயர் 29, ரஜத் படிடார் 9 ரன்களில் அவுட்டாகி சென்றனர். இருப்பினும் எதிர்ப்புறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் இக்கட்டான சூழ்நிலையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியா 300 ரன்களுக்கு மேல் முன்னிலை பெறுவதற்கு முக்கிய பங்காற்றி சதமடித்து 104 ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

குறிப்பாக சமீபத்திய போட்டிகளில் சுமாராக விளையாடியதால் அணியிலிருந்து நீக்குமாறு கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர் அதற்கு பதிலடி கொடுத்து ஃபார்முக்கு திரும்பி நிம்மதி பெருமூச்சு வைத்துள்ளார். இறுதியில் அக்சர் பட்டேல் 45, அஸ்வின் 29 ரன்கள் எடுத்த அதிலும் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டாம் ஹார்ட்லி 4 ரீகன் அகமது 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையும் படிங்க: அவருக்கு முட்டுக் கொடுப்பதை நிறுத்துங்க.. இந்திய ரசிகர்களுக்கு ஜெஃப்ரி பாய்காட் பதிலடி.. நடந்தது என்ன?

இதைத் தொடர்ந்து 399 என்ற மெகா இலக்கை இங்கிலாந்து வெற்றி பெறுவதற்காக இந்தியா நிர்ணயித்துள்ளது. இதற்கு முன் கடந்த 2008ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற போட்டியில் இதே இங்கிலாந்துக்கு எதிராக 387 ரன்களை இந்தியா சேசிங் செய்து வென்றதே வரலாற்றில் இந்திய மண்ணில் ஒரு அணி வெற்றிகரமாக சேசிங் செய்த அதிகபட்ச இலக்காகும். ஆனால் இம்முறை அதை விட பெரிய இலக்கை கட்டுப்படுத்தி இங்கிலாந்தை தோற்கடிக்கும் முனைப்புடன் இந்தியா பந்து வீசி வருகிறது. மறுபுறம் அதை சேசிங் செய்யும் இங்கிலாந்துக்கு பென் டுக்கெட் 28 ரன்களில் அஸ்வின் சுழலில் வீழ்ந்தார். 3வது நாள் முடிவில் 67/1 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஜாக் கிராவ்லி 29* ரெஹன் அஹ்மத் 9* ரன்களுடன் உள்ளனர்.

Advertisement