அவரை எப்படி சமாளிக்குறதுன்னே தெரியல.. அட்டாக் பண்ண திட்டம் போடணும்.. ப்ரெண்டன் மெக்கல்லம் பேட்டி

Brendon Mccullam 2.jpeg
- Advertisement -

இந்திய அணிக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனாலும் இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அதற்கு பதிலடி கொடுத்த இந்தியா தொடரை சமன் செய்து கம்பேக் கொடுத்துள்ளது. விசாகப்பட்டினத்தில் நடந்த அந்த போட்டியில் முதல் இன்னிங்சில் மற்ற பேட்ஸ்மேன்கள் 35 ரன்கள் கூட அடிக்காத போது ஜெய்ஸ்வால் 209 ரன்கள் அடித்து இந்தியாவை காப்பாற்றினார்.

அதே போல் சுப்மன் கில் 2வது இன்னிங்ஸில் 104 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு கை கொடுத்தார். இருப்பினும் பந்து வீச்சு துறையில் அஸ்வின், அக்சர் படேல் போன்ற இந்திய பவுலர்களை சமாளித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் பும்ராவை மட்டும் சமாளிக்க முடியவில்லை.

- Advertisement -

திட்டமே தெரியல:
ஏனெனில் வித்தியாசமான ஆக்சனை கொண்டுள்ள அவர் ஃபிளாட்டாக இருந்த விசாகப்பட்டினம் பிட்ச்சில் தன்னுடைய வேகத்தை பயன்படுத்தி மொத்தம் 7 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக கடந்த போட்டியில் 196 ரன்கள் அடித்து தோல்வியை கொடுத்த ஓலி போப்பின் 3 ஸ்டம்ப்களையும் பறக்க விட்டு போல்டாக்கிய பும்ரா கேப்டன் பென் ஸ்டோக்ஸையும் துல்லியமான யார்கர் பந்தால் கிளீன் போல்ட்டாக்கினார்.

அவருடைய இன்ஸ்விங் யார்கருக்கு பதில் சொல்ல முடியாத பென் ஸ்டோக்ஸ் பேட்டை கீழே விட்டு நிராயுதபாணியாக நின்றது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் அப்படிப்பட்ட பும்ராவை சமாளிக்க மூன்றாவது போட்டியில் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு தெரியவில்லை என்ற பதிலளித்த இங்கிலாந்தின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கெல்லாம் விரைவில் ஏதேனும் ஒரு திட்டத்தை வகுக்க வேண்டுமென கூறினார்.

- Advertisement -

இது பற்றி பிபிசி ஸ்போர்ட் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “எனக்கு தெரியவில்லை. பும்ரா அபாரமான ரிவர்ஸ் ஸ்விங் ஸ்பெல்லை வீசினார். எங்களுடைய வீரர்களிடம் தரம் மற்றும் திறமை இருக்கிறது. எனவே சரியான முடிவை எடுத்து தங்களுடைய திட்டத்தை பின்பற்றுவதற்கான தன்னம்பிக்கை மட்டும் அவர்களுக்கு வேண்டும். குறிப்பாக அவரை அட்டாக் செய்வதற்கான வழியை நாங்கள் கண்டறிய வேண்டும்”

இதையும் படிங்க: ட்ராவிட்டிடம் பேசுனேன்.. இனிமேல் தான் அதை உண்மையா பாக்க போறீங்க.. இந்திய அணியை எச்சரித்த மெக்கல்லம்

“இப்போதைக்கு எங்களுடைய தொப்பியை கழற்றி இந்தத் தொடரில் பும்ராவின் பவுலிங் நாங்கள் பார்த்ததிலேயே சிறந்தது என்று மட்டுமே சொல்ல முடியும். ஏனெனில் பந்து ஸ்விங் ஆகும் போது அவர் அதிக அச்சுறுத்தலை கொடுக்கிறார். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சிறந்த பவுலரான அவர் பந்தை ரிலீஸ் செய்யும் புள்ளி தனித்துவமானதாக இருக்கிறது. காற்றில் அவர் பந்தை திருப்பும் விதமும் அதிகமாக இருக்கிறது. அவர் நல்ல பவுலர் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் கடந்த 18 மாதங்களில் நாங்கள் அவரைப் போன்ற நல்ல பவுலர்களுக்கு எதிராக தேவையான திட்டங்களுடன் வந்து அட்டாக் செய்துள்ளோம்” என்று கூறினார்.

Advertisement