முதல் நாளிலேயே அவரை யூஸ் பண்ணாம.. இங்கிலாந்து ட்ரிக்கை மிஸ் பண்ணிட்டாங்க.. அனில் கும்ப்ளே அதிருப்தி

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்கள் எடுத்தனர்.

அதை தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் இந்தியா 2வது நாள் முடிவில் 421/7 ரன்கள் குவித்து இங்கிலாந்தை விட 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 24, கில் 23, ஸ்ரேயாஸ் ஐயர் 35, கேஎஸ் பரத் 41 ரன்களில் அவுட்டானாலும் ஜெய்ஸ்வால் அதிரடியாக 80 (74) ரன்களும் கேஎல் ராகுல் நிதானமாக 86 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

தவறவிட்ட ட்ரிக்:
அவர்களுடன் சேர்ந்து ரவீந்திர ஜடேஜா 81* ரன்களும் அக்சர் படேல் 35* ரன்களும் குவித்து இந்த போட்டியில் இந்தியாவை வலுப்படுத்தியுள்ளனர். முன்னதாக இத்தொடரில் அதிரடியாக விளையாடி இந்தியாவை வீழ்த்துவோம் என்று எச்சரித்த இங்கிலாந்து முதல் நாளிலேயே தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

மறுபுறம் முதல் நாளிலேயே ஜெய்ஸ்வால் அடித்து நொறுக்கி இந்தியாவுக்கு கொடுத்த அட்டகாசமான துவக்கத்தின் தாக்கத்திலிருந்து இப்போது வரை இங்கிலாந்து மீள முடியாமல் தவிக்கிறது. இந்நிலையில் முதல் நாளிலேயே அதிரடியாக விளையாடிய இடதுகை பேட்ஸ்மேன் ஜெயஸ்வாலுக்கு எதிராக ஆஃப் ஸ்பின்னரான ஜோ ரூட்டை பந்து வீச பயன்படுத்தாமல் இங்கிலாந்து தவறு செய்து விட்டதாக ஜாம்பவான் அனில் கும்ப்ளே அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

அது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “ஜோ ரூட்டை பயன்படுத்தாமல் இங்கிலாந்து ட்ரிக்கை தவற விட்டதாக நான் கருதுகிறேன். ஏனெனில் நல்ல ஆக்சனை கொண்டுள்ள அவர் பந்தை திருப்பக் கூடியவர். முதல் நாளில் இடது கை பேட்ஸ்மேன்களை அஸ்வின் திணறடித்த போது இடதுகை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வாலுக்கு எதிராக அவரை நீங்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்”

இதையும் படிங்க: வெறும் 37 ரன்ஸ் தான்.. சௌரப் குமார் சுழலில் திணறும் இங்கிலாந்து லயன்ஸ்.. உறுதியான இந்தியா ஏ வெற்றி?

“எனவே இந்த ட்ரிக்கை இங்கிலாந்து தவற விட்டதாக நான் கருதுகிறேன்” என்று கூறினார். அவர் கூறுவது போல பகுதி நேர பவுலராக இருந்தாலும் இதர இங்கிலாந்து ஸ்பின்னர்களை காட்டிலும் இதுவரை ஜோ ரூட் தான் 24 ஓவரில் 2 விக்கெட்களை 3.2 என்ற எக்கனாமியில் எடுத்து அசத்தி வருகிறார். குறிப்பாக 80 (74) ரன்கள் அடித்து அச்சுறுத்தலை கொடுத்த ஜெய்ஸ்வாலை கடைசியில் ஜோ ரூட் தான் அவுட் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement