இங்கிலாந்து நாட்டு ரசிகர்களுக்கு ஹைதராபாத் மைதானத்தில் ஏற்பட்ட இன்னல்கள் – பி.சி.சி.ஐ கவனிக்குமா?

ENG-Fans
- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியானது தற்போது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கு நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்தவகையில் இந்த தொடரின் முதலாவது போட்டி கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் துவங்கியது. இந்த போட்டியை காண இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்த “பார்மி ஆர்மி” ரசிகர்கள் பெரும் இன்னல்களை சந்தித்துள்ளதாக இங்கிலாந்து ரசிகர்கள் சிலர் தங்களது வருத்தத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தீவிர ரசிகர்கள் உருவாக்கிய அமைப்புதான் “பார்மி ஆர்மி”. இந்த அமைப்பின் மூலம் இங்கிலாந்து ரசிகர்கள் தங்களுக்குள் ஒரு குழுவை ஏற்படுத்திக் கொண்டு உலகின் எந்த இடத்தில் இங்கிலாந்து அணி சென்று விளையாடினாலும் அந்த நாட்டிற்கு நேரிலேயே சென்று போட்டிகளை கண்டு களிப்பது இவர்களின் வழக்கம். அதோடு மைதானத்தில் இங்கிலாந்து அணியின் வீரர்களை ஆதரிப்பது, கொண்டாடுவது என ஆரவாரம் செய்து வந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்தியாவில் துவங்கி உள்ள இந்த டெஸ்ட் போட்டிகளை காணவும் பார்மி ஆர்மி மூலம் ஆயிரதிற்க்கும் மேற்பட்ட இங்கிலாந்து ரசிகர்கள் இந்தியா வந்துள்ளனர். அந்த வகையில் இந்தியா வந்துள்ள இங்கிலாந்து ரசிகர்களில் பெரும்பாலான வயதானவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த முதல் டெஸ்ட் போட்டியை காண வந்த எங்களுக்கு ஹைதராபாத் மைதானத்தில் வசதி குறைபாடுகள் ஏற்பட்டதாகவும், அவமரியாதையாக நடத்தப்பட்டதாகவும் வேதனையுடன் இங்கிலாந்து ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மைதானத்திற்குள் தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை. வயதானவர்கள் என்று கூட பாராமல் லிப்டில் பயணிக்க அனுமதிக்காமல் படியில் ஏறி செல்லுமாறு கூறுகின்றனர்.

- Advertisement -

மேலும் வெளியிலிருந்து எடுத்து வரும் எந்த ஒரு பொருட்களையும் உள்ளே அனுமதிப்பதில்லை. மைதானத்திற்குள் இருக்கும் எந்த பொருளையும் வாங்க சரியான நேரத்தினை ஒதுக்குவதில்லை என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை இங்கிலாந்து ரசிகர்கள் முன் வைத்துள்ளனர். அதேபோன்று கழிவறையை பயன்படுத்துவதில் கூட பிரச்சினை இருப்பதாகவும் பாதி நேரத்திற்கு மேல் கழிவறை பூட்டி இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : ஒருபக்கம் ஜடேஜா இன்னொரு பக்கம் அக்சர் படேல் இருவருமே சேர்ந்து தவறவிட்ட வாய்ப்பு – அடப்பாவமே இப்படியா ஆகனும்

உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக பார்க்கப்படும் பிசிசிஐ தான் இதனை கருத்தில் கொண்டு வெளிநாட்டு ரசிகர்களுக்கு ஏற்ற சௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சில வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என இங்கிலாந்து பார்மி ஆர்மி ரசிகர்கள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement