ஒருபக்கம் ஜடேஜா இன்னொரு பக்கம் அக்சர் படேல் இருவருமே சேர்ந்து தவறவிட்ட வாய்ப்பு – அடப்பாவமே இப்படியா ஆகனும்

Jadeja-and-Axar
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டமான இன்றே வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது என்று கூறலாம். அந்த வகையில் ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கிய இந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 246 ரன்களில் சுருண்டது.

பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 421 ரன்கள் குவித்திருந்தது. இதன் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவிலேயே இங்கிலாந்து அணியை விட இந்திய அணி 175 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து மூன்றாம் நாளான இன்று போட்டி தொடங்கியதும் இந்திய அணி மேலும் ரன் குவிப்பிற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கூடுதலாக 15 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 436 ரன்களுக்கு சுருண்டது.

இதன் காரணமாக இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 190 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணி 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய இருவருமே தங்களுக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை தவற விட்டுவிட்டனர் என்றே கூறவேண்டும். ஏனெனில் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜடேஜா 81 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 35 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டூவர்ட் பிராடின் சாதனையை நூலிழையில் தவறவிட்ட ஜோ ரூட் – விவரம் இதோ

அதனைத்தொடர்ந்து இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஜடேஜா மேலும் 19 ரன்கள் சேர்த்து சதம் அடிப்பார் என்றும் அக்சர் பட்டேல் 15 ரன்கள் குவித்து அரைசதத்தை அடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் ஜடேஜா 87 ரன்களிலும், அக்சர் படேல் 44 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை அளித்திருக்கும்.

Advertisement