டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டூவர்ட் பிராடின் சாதனையை நூலிழையில் தவறவிட்ட ஜோ ரூட் – விவரம் இதோ

Root-and-Broad
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி நடைபெற்று வரும் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு சுருண்டது.

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 421 ரன்கள் எடுத்திருந்தது. மேலும் இங்கிலாந்து அணியை விட 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்து இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தினை தொடர்ந்ததும் ஜடேஜா சதத்தை நோக்கி செல்வார் என்றும் அக்சர் பட்டேல் அரைசதத்தை நோக்கி செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஜடேஜா 87 ரன்களிலும், அக்சர் பட்டேல் 44 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

அதேபோன்று பும்ரா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 436 ரன்களில் ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணியானது 190 ரன்கள் பின்தங்கி நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணி சார்பாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் ஜோ ரூட் 29 ஓவர்களில் 79 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதையும் படிங்க : அது போனா போகட்டும்.. தப்பு செய்யாம எப்படி கத்துக்க முடியும்.. ஜெய்ஸ்வால் அதிரடி பேட்டி

அதன்படி இன்றைய ஆட்டத்தில் ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்திய ஜோ ரூட் ஹாட்ரிக் சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சிராஜ் சாமர்த்தியமாக விளையாடி அவரை ஹாட்ரிக் சாதனை படைத்து விடாமல் தடுத்தார். இங்கிலாந்து அணி சார்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டூவர்ட் பிராடு மட்டுமே ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தி இருந்த வேளையில் ஜோ ரூட் அதனை நூலிழையில் தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement