அது போனா போகட்டும்.. தப்பு செய்யாம எப்படி கத்துக்க முடியும்.. ஜெய்ஸ்வால் அதிரடி பேட்டி

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களது சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஹைதராபாத் நகரில் ஜனவரி 25ஆம் தேதி துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் 3 மற்றும் ஜடேஜா 3 விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 2வது நாள் முடிவில் 421/7 ரன்கள் எடுத்து அசத்தி வருகிறது. இந்திய அணிக்கு இதுவரை அதிகபட்சமாக யசஸ்வி ஜெய்ஸ்வால் 80, கேஎல் ராகுல் 86, ரவீந்திர ஜடேஜா 81* ரன்கள் குவித்து வெற்றி பெறுவதற்கு தேவையான அடித்தளத்தை வலுவாக அமைத்துள்ளனர். முன்னதாக இந்த தொடரில் அதிரடியாக விளையாடி இந்திய அணி தோற்கடிப்போம் என்று இங்கிலாந்து அணியினர் எச்சரித்தனர்.

- Advertisement -

எப்படி கத்துக்க முடியும்:
ஆனால் முதல் நாளிலேயே ஆல் அவுட்டாகும் அளவுக்கு சொதப்பிய அந்த அணிக்கு இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால் எப்படி அதிரடியாக விளையாட வேண்டும் என்பதை காண்பித்தார். குறிப்பாக முதல் நாள் மாலை நேரத்தில் பேட்டிங் செய்த அவர் 100க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி 76 (70) ரன்கள் விளாசி இங்கிலாந்துக்கு உண்மையான பஸ்பாலை காண்பித்தார்.

அதனால் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் இரண்டாவது நாள் காலையில் மீண்டும் அதிரடியாக விளையாட முயற்சித்து 80 (74) ரன்களில் அவுட்டானது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இந்நிலையில் அதிரடியாக விளையாட முயற்சித்து சதத்தை தவற விட்டதில்லை கவலையில்லை என்று தெரிவிக்கும் ஜெய்ஸ்வால் தவறு செய்யாமல் எதையும் கற்றுக் கொள்ள முடியாது என்றும் அதிரடியாக கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி இரண்டாவது நாள் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் நான் சதமடித்திருந்தால் அது அபாரமானதாக இருந்திருக்கும். ஆனால் அங்கே என்னுடைய செயல்பாடு மற்றும் சிந்தனையை நான் எடுத்து வந்தேன். எப்போதும் நான் என்னுடைய சிறந்தவற்றை செய்ய முயற்சிக்கிறேன். சில நேரங்களில் அதிரடியாக விளையாடுவது வேலை செய்யும். சில நேரங்களில் செய்யாது”

இதையும் படிங்க: நழுவிப்போன 22 ரன்ஸ்.. அசட்டு தைரியத்தால் குறைத்து எடைப்போடும் ஆஸி? இந்தியா போல சாதிக்குமா வெ.இ

“எனவே நான் தவறை செய்து அதற்காக அவுட்டாகலாம். ஆனால் அந்த தவறிலிருந்து நான் பாடங்களை கற்க முயற்சிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இங்கிலாந்து ஸ்பின்னர்களை அடித்து நொறுக்க வேண்டும் என்பது என்னுடைய யுக்தி கிடையாது. மாறாக சில பந்துகளுக்கு எதிராக நேர்மறையான ஷாட்களை அடிக்க வேண்டும் என்பதே என்னுடைய சிந்தனையாக இருந்தது” என்று கூறினார்.

Advertisement