ENG vs NZ : நியூஸிலாந்து தரமான பவுலிங்.. வெறும் 282 ரன்கள் அடித்த இங்கிலாந்து.. தனித்துவமான உலக சாதனை

- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐசிசி 2023 உலகக் கோப்பை அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவின் அகமதாபாத் நகரில் துவங்கியது. அதில் மதியம் 2.30 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஃபைனலில் தோல்வியை சந்திக்காத போதிலும் கோப்பையை நழுவ விட்ட நியூசிலாந்து டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய இங்கிலாந்துக்கு 40 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் தடுமாற்றமாக செயல்பட்ட ஜானி பேர்ஸ்டோ 33 ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் தடுமாறிய டேவிட் மாலன் 14 ரன்கள் அவுட்டாக அடுத்ததாக வந்த இளம் வீரர் ஹாரி ப்ரூக் 15 ரன்கள் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மொயின் அலியும் 11 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார்.

- Advertisement -

தனித்துவ உலக சாதனை:
இருப்பினும் மறுபுறம் நட்சத்திர வீரர் ஜோ ரூட் நிதானம் கலந்த அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அவருக்கு கை கொடுக்க முயற்சித்த கேப்டன் ஜோஸ் பட்லர் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 43 (42) ரன்களில் ஆட்டமிழந்தார். அதே போல அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் 20 ரன்கள் மறுபுறம் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 77 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் சாம் கரண் 14, கிரிஸ் ஓக்ஸ் 11, அடில் ரசித் 15*, மார்க் வுட் 13* ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாவதை தவிர்த்து 50 ஓவர்களில் இங்கிலாந்து 282/9 ரன்கள் குவிக்க உதவினர். மறுபுறம் பந்து வீச்சில் அசத்திய நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளும் மிச்சல் சாட்னர் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியில் இங்கிலாந்து 300 ரன்கள் அடிக்காவிட்டாலும் ஜானி பேர்ஸ்டோ 33, டேவிட் மாலன் 14, ஜோ ரூட் 77, ஹரி ப்ரூக் 25, மொய்ன் அலி 11, ஜோஸ் பட்லர் 43, லியாம் லிவிங்ஸ்டன் 20, சாம் கரண் 14, கிரிஸ் ஓக்ஸ் 11, அடில் ரசித் 15*, மார்க் வுட் 13* என களமிறங்கிய 11 வீரர்களும் இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட போட்டியில் களமிறங்கிய அனைத்து வீரர்களும் இரட்டை இலக்க ரன்களை எடுத்த முதல் அணி என்ற தனித்துவமான உலக சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது.

இதையும் படிங்க: ENG vs NZ : நியூஸிலாந்து தரமான பவுலிங்.. வெறும் 282 ரன்கள் அடித்த இங்கிலாந்து.. தனித்துவமான உலக சாதனை

இதற்கு முன் வரலாற்றில் நடைபெற்ற 4658 ஒருநாள் போட்டியிலும் அதிகபட்சமாக 7 – 10 வீரர்கள் வரை மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்துள்ளனர். ஏனெனில் எப்படியாவது ஏதோ ஒரு வகையில் ஒரு சில வீரர்கள் டக் அவுட் அல்லது 1 – 9 ரன்களில் அவுட்டாகி அல்லது நாட் அவுட்டாக செல்வது வழக்கமாகும். ஆனால் இந்த போட்டியில் அதற்கு விதிவிலக்காக களமிறங்கிய அனைத்து 11 வீரர்களும் இரட்டை இலக்க ரன்களை தொட்டுள்ளனர். சொல்லப்போனால் இதன் வாயிலாக ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றிலும் ஒரு குறிப்பிட்ட போட்டியில் களமிறங்கிய 11 வீரர்களும் இரட்டை ரன்களை எடுத்த முதல் அணி என்ற சாதனையையும் இங்கிலாந்து படைத்துள்ளது.

Advertisement