ENG vs NZ : 2 அணியிலும் 3 வீரர்கள் இடம்பெறவில்லை. கோலாகலமாக துவங்கிய – உலககோப்பை முதல் போட்டி

ENG-vs-NZ
- Advertisement -

இந்தியாவில் கோலாகலமாக துவங்கியுள்ள 2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான முதல் போட்டியில் அக்டோபர் 5-ஆம் தேதி இன்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அந்த வகையில் சற்று முன்னர் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டு அதில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோலாகலமாக துவங்கியுள்ள இந்த உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இரு அணிகளும் முக்கிய வீரர்கள் 3 பேர் இடம் பெறாதது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து அணி சார்பாக முன்னணி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ரீஸ் டாப்ளே மற்றும் அட்கின்சன் ஆகியோர் விளையாடவில்லை என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் அறிவித்தார்.

அதே போன்று நியூசிலாந்து அணியின் தற்காலிக கேப்டனாக இருக்கும் டாம் லேதம் இந்த போட்டியில் கேன் வில்லியம்சன், சுழற்பந்து வீச்சாளரான இஷ் சோதி மற்றும் லாக்கி பெர்குசன் ஆகியோர் விளையாடவில்லை என்று அறிவித்தார்.

- Advertisement -

இப்படி இரண்டு அணிகளிலுமே முக்கிய மூன்று வீரர்கள் இடம் பெறாமல் இருந்தாலும் இரண்டு அணிகளுமே சரிசமமான பலத்துடன் இந்த போட்டியில் விளையாட உள்ளது. மேலும் இங்கிலாந்து அணி சார்பாக அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் மிக பலமாக இருந்தாலும் அதற்கேற்றார் போல் நியூசிலாந்து அணியும் ஆல் ரவுண்டர்களை வைத்து அணியை முழுமைப்படுத்தி உள்ளதால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பரபரப்பாக செல்லும் என்பதில் எவ்வித சந்தேகம் இல்லை.

இதையும் படிங்க : பிரியாணி வேற லெவல்.. ஆனா இந்தியாவின் மைதாங்களில் தான் அந்த பிரச்சனை இருக்கு.. பாபர் கருத்து

அதோடு இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் தற்போது அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் லேதம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்த வேளையில் டாசில் தோல்வியை சந்தித்த பட்லரும் நாங்களும் இந்த போட்டியில் முதலில் பந்து வீசவே விரும்பினோம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement