பிரியாணி வேற லெவல்.. ஆனா இந்தியாவின் மைதாங்களில் தான் அந்த பிரச்சனை இருக்கு.. பாபர் கருத்து

Babar Azam 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்று சரித்திரம் படைப்பதற்காக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியினர் 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியாவுக்கு வந்துள்ளனர். குறிப்பாக எல்லை பிரச்சனை காரணமாக கடைசியாக 2016 டி20 உலகக் கோப்பையில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் இருக்கும் பாபர் அசாம் உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் தங்களுடைய கேரியரில் முதல் முறையாக இப்போது தான் இந்திய மண்ணில் விளையாட உள்ளனர்.

அந்த சூழ்நிலையில் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் இந்திய மண்ணில் தங்களது வீரர்கள் எப்படி நடத்தப்படுவார்கள் என்ற கவலை பாகிஸ்தான் ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் விருந்தோம்பல் செய்வதற்கு புகழ்பெற்ற இந்தியர்கள் ஹைதராபாத் நகருக்கு வந்த பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியினருக்கு அமோகமாக வரவேற்பு கொடுத்தனர். அதே போல கழுத்தில் துண்டு போட்டு தலையில் பன்னீர் தெளித்து பிசிசிஐ சார்பிலும் பாகிஸ்தான் வீரர்களுக்கு பாரம்பரியமான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

சின்ன குறை:
அதைத்தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக ஹைதராபாத் நகரில் இருந்த பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ரசிகர்கள் தங்களுக்கு பெரிய ஆதரவு கொடுத்ததாகவும் அங்குள்ள ஹோட்டலில் மிகவும் புகழ்பெற்ற பிரியாணியை தினம்தோறும் பரிமாறப்பட்டதாகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சொல்லப்போனால் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த பயிற்சி போட்டிகளில் ஹைதராபாத் பிரியாணி காரணமாக தங்களுடைய ஃபீல்டிங் சுமாராக இருந்திருக்கலாம் என்று துணை கேப்டன் சடாப் கான் கலகலப்பாக தெரிவித்தார்.

இந்நிலையில் தங்களுடைய சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை கொடுக்கும் அளவுக்கு இந்திய ரசிகர்கள் ஆதரவு கொடுப்பதாக தெரிவிக்கும் ஹைதராபாத் பிரியாணி மிகவும் சுவையாக இருந்ததாகவும் பாராட்டியுள்ளார். இருப்பினும் இந்த உலகக் கோப்பையில் இந்தியாவில் மைதானங்களின் பவுண்டரி அளவுகள் மிகவும் சிறியதாக இருப்பது பவுலர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்தியாவில் எங்களுக்கு கொடுக்கப்பட்ட மிகச் சிறப்பான வசதிகளை நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ரசிகர்கள் எங்களுடைய அணி மீது மரியாதை வைத்திருக்கின்றனர். அத்துடன் ஹைதராபாத்தில் ஒரு வாரமாக இருந்த நாங்கள் இந்தியாவில் அல்லாமல் வீட்டில் இருப்பது போல் உணர்ந்தோம். அங்கே கொடுக்கப்பட்ட பிரியாணி உணவு சிறப்பாக இருந்தது. எனவே இதை பயன்படுத்தி எங்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களுக்காக இத்தொடரில் எங்களுடைய 100% செயல்பாடுகளை வெளிப்படுத்த உள்ளோம்”

இதையும் படிங்க: யாரோட இடத்தையும் ஆக்கிரமிக்கல, அவர் தேர்வானது இந்தியாவின் ஆசிர்வாதம்.. சந்தீப் பாட்டில் ஆதரவு

“மேலும் இந்தியாவில் விளையாடுவது எங்களுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. ஏனெனில் பாகிஸ்தான் மற்றும் ஆசியாவில் இருப்பது போன்ற கால சூழ்நிலைகள் தான் இங்கே இருக்கின்றன. ஆனால் இங்கே பவுண்டரியின் அளவுகள் மிகவும் சிறியதாக இருக்கிறது. அதனால் பவுலர்கள் தவறை கூட செய்யக்கூடாது. எனவே இத்தொடரில் அனைவரும் பெரிய ஸ்கோர்கள் அடிப்பார்கள் என்பதால் நாங்களும் அதற்கேற்றார்கள் உட்பட வேண்டும்” என்று கூறினார்

Advertisement