ENG vs NED : 3 விக்கெட்டுகள் இழந்ததும் பயந்தோம்.. ஆனால் வெற்றிக்கு பிறகு – ஆட்டநாயகன் சவுத் சாக்கில் பேட்டி

Saud-Shakeel
- Advertisement -

பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணியானது 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. அந்த வகையில் இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நெதர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களையும் பூர்த்தி செய்யாமல் 49 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் மற்றும் சவுத் ஷாக்கில் ஆகியோர் 68 ரன்கள் அடித்தனர்.

- Advertisement -

பின்னர் 287 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணியானது 41 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் காரணமாக பாகிஸ்தான அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் சார்பாக ஹாரிஸ் ரவுப் 3 விக்கெட்டுகளையும், ஹசன் அலி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியில் 68 ரன்கள் குவித்த சவுத் ஷாக்கில் ஆட்டநாயகன் விருதினை பெற்றிருந்தார். அதனை தொடர்ந்து அவரது இந்த சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

நாங்கள் இந்த போட்டியில் பாசிட்டிவாக ரன்களை குவிக்க முயற்சித்தோம். அந்த வகையில் ஆரம்பத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்தாலும் என்னால் எளிதில் பவுண்டரிகளை அடிக்க முடிந்தது. அதேபோன்று அழுத்தம் எங்கள் மீது திரும்பியதும் நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைத்தோம். கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடுவதாக நினைக்கிறோம்.

இதையும் படிங்க : PAK vs NED : நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்த சிறப்பான வெற்றிக்கு காரணம் இதுதான் – பாபர் அசாம் பேட்டி

ஐந்தாவது இடத்தில் களமிறங்கியும் எங்களது அணிக்காக மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கியதாக நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக ஸ்வீப் ஷாட் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஆகியவற்றின் நான் சிறப்பாக அடித்துள்ளதாக நினைக்கிறேன். இந்தப் போட்டியை காண நேரில் வந்த ரசிகர்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதே போன்று எங்களது அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என சவுத் ஷாக்கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement