PAK vs NED : நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்த சிறப்பான வெற்றிக்கு காரணம் இதுதான் – பாபர் அசாம் பேட்டி

Babar-Azam
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் ஸ்காட் எட்வர்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும் மோதின.

அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 68 ரன்களையும், சவுத் சவுக்கில் 68 ரன்களையும் குவித்து அசத்தினர். அதன் பின்னர் 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணியானது 41 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் மட்டுமே குவித்ததால் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில் : ஹைதராபாத் மக்கள் எங்களுக்கு நிறையவே ஆதரவளித்தனர். நாங்கள் இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு அணியாக நாங்கள் இங்கு விளையாடியதில் எங்களுக்கு மிகவும் திருப்தியாக உள்ளது.

- Advertisement -

அதோடு இங்கு கிடைக்கும் வரவேற்பும் எங்களுக்கு சாதகமாக உள்ளது. எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசினர். நாங்கள் போட்டியை ஆரம்பிக்கும் போதும் சரி, மிடில் ஓவர்களிலும் சரி எங்களது பவுலர்கள் சரியான நேரத்தில் சிறப்பான பந்துவீசினர். அதேபோன்று நாங்கள் பேட்டிங்கில் மூன்று விக்கெட்டுகளை இழந்த போதும் ரிஸ்வான் மற்றும் சவுத் சவுக்கில் ஆகியோர் அழுத்தமான சூழ்நிலையிலும் நெதர்லாந்து அணிக்கு எதிராக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க : PAK vs NED : கைல இருந்த மேட்ச்.. அவருக்கு சப்போர்ட் பண்ணிருந்தா பாகிஸ்தானை தோற்கடிச்சுருப்போம்.. கேப்டன் எட்வர்ட்ஸ் வருத்தம்

சவுத் சவுக்கில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமாக தன்னை முன்னேற்றத்திற்கு கொண்டு வந்துள்ளார். அதோடு எங்களது பந்துவீச்சாளர்கள் சரியான திட்டத்துடன் பந்துவீசி எங்களுக்கு வெற்றியை தேடித்தந்துள்ளனர் என பாபர் அசாம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement