
சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் மீண்டும் துவங்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2007 டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வென்று சாதனை படைத்தது. அந்த வெற்றியின் எதிரொலியாக ஐபிஎல் எனும் தொடர் இந்தியாவில் துவங்கப்பட்டது. அதற்கடுத்த வருடம் சாம்பியன் லீக் டி20 தொடர் துவங்கப்பட்டது. அதில் உலகின் டாப் 8 பிரீமியர் லீக் டி20 அணிகள் விளையாடின.
அததொடரில் விளையாட இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் விளையாடும் 2 அணிகளையும் சேர்த்து டாப் 3 அணிகள் தகுதி பெறும். அதே போல தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 தொடர்களில் டாப் இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடத் தகுதி பெறும்.
அந்த 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் இந்தியா அல்லது தென்னாப்பிரிக்காவில் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நடைபெற்று வந்தன. 2014 வரை நடைபெற்ற அந்தத் தொடர் இந்தியாவுக்கு வெளியே நடைபெறும் போது பெரிய வரவேற்பை பெறவில்லை. எனவே அத்தொடர் ரசிகர்களின் போதிய ஆதரவின்மை மற்றும் ஸ்பான்சர்ஷிப் பிரச்சனைகள் காரணமாக 2015ஆம் ஆண்டு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
2009 – 2014 வரை நடைபெற்ற அந்தத் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 2 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணிகளாக சாதனை படைத்தன. குறிப்பாக தோனி தலைமையில் சிஎஸ்கே 2 முறை கோப்பை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரை மீண்டும் நடத்துவதற்கான பேச்சுவார்த்தையில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் ஈடுபட்டுள்ளதாக இங்கிலாந்து வாரியத்தின் தலைமை நிர்வாக ரிச்சர்ட் கோல்ட் தெரிவித்துள்ளார்.
அத்தொடரை உலக கிளப் சாம்பியன்ஷிப் என்ற பெயரில் மீண்டும் துவங்குவதற்கு முயற்சிகள் எடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அது அட்டவணையில் இருக்கிறது. சந்தேகமின்றி ஏதோ ஒரு சமயத்தில் உலக கிளப் சாம்பியன்ஷிப் ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய 2 வகையான வடிவங்களில் நடைபெறும்”
இதையும் படிங்க: சி.எஸ்.கே அணியில் இணைந்த ராசி.. உடனடியாக டேவால்டு பிரீவிஸ்க்கு அடிச்ச ஜாக்பாட் – விவரம் இதோ
“அதுவே அடுத்த தர்க்கரீதியான படியாகும். சாம்பியன்ஸ் லீக் தொடர் தமக்கான சரியான நேரத்திற்கு முன்பாகவே ஆரம்பிக்கப்பட்டது. அதனால் வணிகரீதியாக அது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆனால் அது மிகவும் நல்ல தொடர்” என்று கூறினார். ஆனால் தற்போது உலகம் முழுவதிலும் அனைத்து நாடுகளிலும் தனித்தனியே பிரீமியர் லீக் தொடர்கள் நடைபெற்று வருவதால் தொடரை மீண்டும் நடத்துவது கடினமான ஒன்றாகும். அதையும் தாண்டி நடைபெற்றல் தற்போது அதை ரசிகர்கள் வரவேற்பார்கள்.