இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது. இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே அணி இந்த ஆண்டு அடைந்த படுமோசமான தோல்வி பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.
சி.எஸ்.கே அணியில் இணைந்த கையோடு பிரீவிஸ்க்கு அடிச்ச ஜாக்பாட் :
இந்நிலையில் இந்தத் தொடரின் பிற்பாதியில் மாற்று வீரராக சிஎஸ்கே அணிக்குள் இணைந்த தென்னாப்பிரிக்க வீரர் டேவால்டு பிரீவிஸ் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் எதிர்கால நட்சத்திர வீரர் இவர் தான் என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக இவரை சிஎஸ்கே அணி முழுமையாக ஒப்பந்தம் செய்து கொள்ளும் என்றும் இனி தொடர்ச்சியாக அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என்றெல்லாம் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இணைந்த கையோடு தற்போது அவருக்கு சர்வதேச தென்னாப்பிரிக்க அணியிலும் ஒரு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணிக்காக டி20 போட்டியில் 2023 ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்புகளை பெறாமல் இருந்து வந்தார்.
ஆனால் தற்போது சிஎஸ்கே அணியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு எதிர்வரும் தென்னாப்பிரிக்கா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் கிடைத்துள்ளது. அந்த வகையில் ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்கா அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க : ஜஸ்ப்ரீத் பும்ராவை நான் ஈஸியா சமாளிச்சிடுவேன்.. அதுக்கு என்கிட்ட பிளான் இருக்கு – இங்கிலாந்து வீரர் சவால்
இந்த ஜிம்பாப்வே தொடருக்கு அடுத்து முத்தரப்பு தொடரிலும் தென்னாப்பிரிக்கா விளையாட இருக்கிறது. மேலும் ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்த தென்னாப்பிரிக்க அணியானது வரும் ஜூன் 11-ஆம் தேதி துவங்கும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.



