IPL 2023 : மினி ஏலத்தில் நான் கலந்துகொள்ளப்போவதில்லை – அதிரடி முடிவை கையிலெடுத்த சி.எஸ்.கே வீரர்

CSK
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் எதிர்வரும் 2023-ஆம் ஆண்டிற்கான பதினாறாவது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் இதுவரை 991 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இதில் 14 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர்களும் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.

Auction

- Advertisement -

இந்நிலையில் ஒரு சில வீரர்கள் இந்த ஐ.பி.எல் மினி ஏலத்தில் தங்களது பெயரினை பதிவு செய்யாமல் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த சீசனில் இருந்து விலகி வருகின்றனர். அந்த வகையில் சி.எஸ்.கே அணியை சேர்ந்த நட்சத்திர வீரரான வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் டுவைன் பிராவோ இந்த ஐபிஎல் தொடரின் மினி ஏலத்திலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் அறிமுகமான பிராவோ முதல் 3 சீசன்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அதன்பின்னர் 2011-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சிஎஸ்கே அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணி கோப்பை வென்ற 2011,2018 மற்றும் 2021 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் பிராவோ சி.எஸ்.கே அணிக்கு முக்கிய வீரராக தனது சிறப்பான பங்களிப்பினை அளித்துள்ளார்.

Bravo

அந்தவகையில் இதுவரை 161 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 158 விக்கெட்களையும், 1560 ரன்களையும் குவித்துள்ளார். டி20 கிரிக்கெட் பொறுத்தவரை சிறப்பான ஆல்ரவுண்டராக பார்க்கப்படும் பிராவோ தற்போது 39 வயதை எட்டியுள்ள வேளையில் கடந்த ஆண்டு 4.4 கோடிக்கு சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் சீசனுக்கான மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட கைரன் பொல்லார்டு வேறொரு அணிக்கு விளையாட மனமில்லை என்று கூறி ஓய்வினை அறிவித்து வெளியேறியது போன்று தற்போது மினி ஏலத்தில் இருந்து வெளியேறியுள்ள பிராவோ அவரது வழியை பின்பற்றி இனி சிஎஸ்கேவை தவிர வேறு எந்த அணிக்காகவும் விளையாட விருப்பம் இல்லை என்று கூறி ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பிருக்கும் இவர் யார்? – முழு விவரம் இதோ

அதே வேளையில் அடுத்த சீசனுக்கான சி.எஸ்.கே அணியில் இருந்து ஓய்வுபெற்ற ராபின் உத்தப்பா, தமிழக வீரர் நாராயணன் ஜெகதீசன், ஹரி நிஷாந்த் மற்றும் க்றிஸ் ஜோர்டான் என மொத்தம் எட்டு வீரர்களை சி.எஸ்.கே அணி வெளியேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement