12 ஓவரில் 154 ரன்ஸ்.. தெ.ஆ டி20 தொடரில் 2 ரன்னில் நிகழ்ந்த சோக்கிங்.. வெற்றியை பறித்த டர்பன்

SA20
- Advertisement -

தென்னாப்பிரிக்காவில் ஐபிஎல் போல நடைபெறும் எஸ்ஏ டி20 தொடரின் 2025 சீசன் ஜனவரி 10ஆம் தேதி துவங்கியது. அந்த தொடரில் டர்பன் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயிட்ன்ஸ் மற்றும் புரோட்டீரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. கிங்ஸ்மீது கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற டர்பன் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய டர்பன் 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 209-4 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ப்ரைஸ் பார்சன்ஸ் 47 (28), நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 60* (40), வியன் முல்தார் 45* (19) ரன்களை அடித்து அசத்தினார்கள். ப்ரோடீரியா அணிக்கு அதிகபட்சமாக சேனுரான் முத்துசாமி 4 ஓவரில் 21 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

அபார துவக்கம்:

அடுத்ததாக 210 ரன்களை துரத்திய ப்ரோடீரியா அணிக்கு துவக்க வீரர்கள் வில் ஜேக்ஸ் மற்றும் ரகமனுல்லா குர்பாஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள். பவர் பிளே ஓவர்களில் எதிரணியை பந்தாடிய அந்த ஜோடி 100 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான துவக்கத்தை கொடுத்தது. நேரம் செல்ல செல்ல வெளுத்து வாங்கிய அந்த ஜோடியில் இருவருமே அரை சதத்தை அடித்து தங்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்கள்.

அந்த வகையில் 12 ஓவரில் 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் குர்பாசை 89 (43) ரன்களில் நூர் அகமது அவுட்டாக்கினார். அடுத்ததாக வந்த கேப்டன் ரிலீ ரோசவ் 1 (4) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் அதிரடி காட்டிய வில் ஜேக்ஸ் 64 (35) ரன்களில் நூர் அஹ்மத் சுழலில் போல்ட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த சேனுரான் முத்துசாமி 8, லியம் லிவிங்ஸ்டன் 13 ரன்களில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

சோக் ஃபினிஷ்:

அதைப் பயன்படுத்தி அபாரமாக பந்து வீசிய டர்பன் அணி அதற்கடுத்ததாக வந்த ஜேம்ஸ் நீசமை 3 ரன்களில் அவுட்டாக்கி அழுத்தத்தை அதிகரித்தது. இறுதியில் நவீன்-உல்-ஹக் வீசிய கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட போது கெய்ல் வேரின் 10* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் ப்ரோட்டீரியா அணியால் 207-6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதையும் படிங்க: 150க்கு அவுட்.. நியூஸிலாந்திடம் மீண்டும் கோப்பையை கோட்டை விட்ட இலங்கை அதிரடியான ஆறுதல் வெற்றி

அதனால் வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற டர்பன் அணிக்கு அதிகபட்சமாக நூர் அகமது, நவீன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். மறுபுறம் 154-0 என வலுவான துவக்கத்தை பெற்ற ப்ரோட்டீரியா வெற்றியை கையில் வைத்திருந்தது. ஆனால் கடைசி 8 ஓவர்களில் சோக் செய்த அந்த அணி ஃபினிஷிங் செய்யாமல் வெற்றியை எதிரணிக்கு தாரை வார்த்தது.

Advertisement