- Advertisement -
இந்திய கிரிக்கெட்

3 தமிழக வீரர்களுக்கு இடம்.. துலீப் கோப்பையில் ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி உத்தேச ப்ளேயிங் லெவன்

இந்தியாவில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. அதில் ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோரது தலைமையில் 4 அணிகள் விளையாட உள்ளது. அந்த 4 அணிகளில் ருதுராஜ் தலைமை தாங்கும் இந்தியா சி அணியின் உத்தேச பிளேயிங் லெவனை பற்றி பார்ப்போம்.

ஓப்பனிங்: சந்தேகமின்றி துவக்க வீரராக கேப்டன் ருதுராஜ் விளையாடுவதற்கு தகுதியானவராக உள்ளார். அவருடன் தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்குவதற்கு மிகவும் சரியானவர். ஏற்கனவே டிஎன்பிஎல் மற்றும் ஐபிஎல் தொடரில் மிகச்சிறப்பாக விளையாடிய அவர் இந்தியாவுக்காகவும் அறிமுகமாகி அசத்தினார். எனவே ருதுராஜ் – சாய் சுதர்சன் ஆகிய இடது – வலது கை ஜோடி எதிரணிக்கு சவாலை கொடுக்கக் கூடியதாக இருக்கும்.

- Advertisement -

மிடில் ஆர்டர்: 3வது இடத்தில் ரஜத் படிடார் பொருந்தக்கூடியவராக இருப்பார். ரஞ்சிக் கோப்பையில் 3வது இடத்தில் பெரிய ரன்கள் குவித்து இந்தியாவுக்காக கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமான அவர் சிறப்பாக செயல்படவில்லை. எனவே துலீப் கோப்பையில் அசத்தும் முனைப்புடன் அவர் விளையாட உள்ளார்.

அதைத் தொடர்ந்து 4வது இடத்தில் இந்திய அணியின் புதிய டி20 கேப்டன் சூரியகுமார் விளையாடுவதற்கு தகுதியானவராக உள்ளார். தமது கேரியரில் பெரும்பாலும் 4வது இடத்தில் விளையாடும் அவர் துலீப் கோப்பையிலும் அசத்துவதற்கு தயாராக உள்ளார். அதன் பின் 5வது இடத்தில் தமிழகத்தின் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் பாபா இந்திரஜித் விளையாடுவதற்கு தகுதியானவர்.

- Advertisement -

ஏனெனில் உள்ளூர் கிரிக்கெட்டில் 54 என்ற சராசரியை கொண்டுள்ள அவர் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அசத்தி வருகிறார். 6வது இடத்தில் இளம் விக்கெட் கீப்பர் இடது கை பேட்ஸ்மேன் அபிஷேக் போரேல் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்பப்படுகிறது.

பவுலர்கள்: பந்து வீச்சுத் துறையில் உள்ளூர் கிரிக்கெட்டில் 15 போட்டிகளில் 65 விக்கெட்டுகள் எடுத்துள்ள மாணவ் சுதர் மற்றும் முந்தைய ஐபிஎல் தொடர்களில் ஓரளவு அசத்திய மயங் மார்கண்டே விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் வேகப்பந்து வீச்சாளராக உம்ரான் மாலிக் விளையாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: 7 விக்கெட்ஸ்.. அண்டர்-25 இங்கிலாந்து வீரர்களிடம் ஆரம்பம் ஆவதற்குள் இலங்கைக்கு விழுந்த பரிதாப அடி

அதே போல தமிழகத்துக்காக விளையாடும் மற்றொரு வீரர் சந்திப் வாரியர் மற்றும் வியாஷக் விஜய்குமார் ஆகியோர் எதிரணியை மிரட்டும் வேகத்தை கொண்டுள்ளனர். இதில் சந்திப் வாரியர் முதல் தர கிரிக்கெட்டில் 186 விக்கெட்களும் விஜய்குமார் 86 விக்கெட்டுகளும் எடுத்து அனுபவத்தை கொண்டுள்ளனர். இந்தியா சி அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சாய் சுதர்சன், ரஜத் படிடார், சூரியகுமார் யாதவ், பாபா இந்திரஜித், மாணவ் சுதர், மயங் மார்கண்டே, விஜய்குமார், சந்தீப் வாரியார், உம்ரான் மாலிக்

- Advertisement -