அதை யூஸ் பண்ணி இந்தியா நல்லா ஏமாத்துறாங்க.. முன்னாள் பாக் வீரர் பரபரப்பான விமர்சனம்

Hasan Raza
- Advertisement -

உச்சகட்டத்தை எட்டியுள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை தனதாக்கியுள்ளது. அதனால் ஏற்கனவே செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா 2011 போல சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற டாப் அணிகளை தோற்கடித்து மிரட்டும் இந்தியாவுக்கு புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்து அசால்டாக 300 – 400 ரன்களை அடித்து எதிரணிகளை பந்தாடி வந்த தென்னாப்பிரிக்கா சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணியையும் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் தெறிக்க விட்ட இந்தியா 234 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

- Advertisement -

இந்தியா ஏமாத்துறாங்க:
அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி 101*, ஸ்ரேயாஸ் ரன்கள் 77 எடுத்த உதவியுடன் 327 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதை துரத்திய தென்னாப்பிரிக்கா மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 83 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக மார்க்கோ யான்சன் 14 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்நிலையில் இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா பந்தில் வேன் டெர் டுஷனை ரிவியூ எடுத்து எல்பிடபிள்யூ முறையில் இந்தியா அவுட்டாக்கியது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசன் ராஜா தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிக ஸ்விங்கை பெறுவதற்காக ஐசிசி வேண்டுமென்று இந்திய பவுலர்களுக்கு புதிய பந்தை கொடுப்பதாக விமர்சித்த அவர் தற்போது ஒளிபரப்பு நிறுவனத்தின் உதவியுடன் டிஆர்எஸ் சோதனைகளை இந்தியா தங்களுக்கு சாதகமாக மாற்றுவதாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜடேஜா 5 விக்கெட்டுகளை எடுத்து தன்னுடைய கேரியரின் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்தார். இருப்பினும் டிஆர்எஸ் எப்படி வேலை செய்கிறது என்பதை பற்றி நாம் பேச வேண்டும். வேன் டெர் டுஷன் விளையாடிய போது பந்து மிடில் ஸ்டம்ப்பில் பிட்ச்சான பின் திடீரென லெக் ஸ்டம்ப்பில் அடிக்கிறது. இது எப்படி சாத்தியமாகும்? ஏனெனில் பந்து லைனில் பட்ட பின் லெக் ஸ்டம்ப் நோக்கி நகர்கிறது”

இதையும் படிங்க: நடப்பு உலகக்கோப்பை தொடரில் மிக மோசமான பவுலராக மார்கோ யான்சன் படைத்த பரிதாப சாதனை – விவரம் இதோ

“மற்றவர்களை போல நானும் இதில் என்னுடைய கருத்தை தெரிவிக்கிறேன். இது போன்றவற்றை விசாரிக்க வேண்டும். ஏனெனில் டிஆர்எஸை சிலர் (பிசிசிஐ) கையாள்வது தெளிவாக தெரிகிறது. சொல்லப்போனால் பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டியிலும் கடைசி விக்கெட்டுக்கு இதே போல் டிஆர்எஸ் சரியாக கொடுக்கப்படவில்லை. இதற்காக யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. சொந்த மண்ணில் உலகக்கோப்பை நடைபெறுவது அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement