பும்ராவிற்கு பதிலாக முகமது ஷமி இடம்பெறுவாரா? மாட்டாரா? – கோச் ராகுல் டிராவிட் அளித்த பதில் இதோ

Dravid-1
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கும் டி20 உலக கோப்பை தொடரானது நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாட உள்ள வேளையில் எந்த அணி கோப்பையை கைப்பற்ற போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போதைய உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் ஆஸ்திரேலியா புறப்பட தயாராகி வருகின்றனர்.

ICC T20 World Cup

- Advertisement -

அந்த வகையில் ரோகித் சர்மா தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியும் நாளை ஆஸ்திரேலியா புறப்பட உள்ளது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயம் காரணமாக கடைசி நேரத்தில் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என அதிகாரவபூர்வமாக பிசிசிஐ அறிவித்தது.

இதன் காரணமாக பும்ராவிற்கு பதிலாக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடப் போகும் வீரர் யார் என்பது குறித்த கேள்வி தற்போது அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு என்றாலும் அவருக்கான மாற்று வீரரை தேர்வு செய்தாக வேண்டிய அவசியம் தற்போது இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.

Shami-1

அப்படி பும்ராவின் இடத்தில் மாற்று வீரர்களாக இருக்கும் முகமது ஷமி அல்லது தீபக் சாகர் ஆகிய இருவரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் முகமது ஷமி டி20 உலகக்கோப்பை தொடரில் இடம் பிடித்து விளையாடுவாரா? என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அளித்த பதிலில் கூறியதாவது :

- Advertisement -

பும்ராவிற்கு பதிலாக யாரை அணியில் சேர்க்கலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஆனாலும் அக்டோபர் 15-ஆம் தேதி வரை எங்களுக்கு கால அவகாசம் உள்ளதால் அதுவரை எங்களுடைய ஆலோசனை தொடரும். தற்போது முகமது ஷமி கொரோனா பாதிப்பு காரணமாக தென்னாப்பிரிக்க தொடரில் விளையாடவில்லை. அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார்.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பையில் பும்ராவிற்கு பதில் விளையாடப்போவது யார்? – ரோஹித் சர்மா அளித்த பதில் இதோ

இருந்தாலும் இன்னும் 15 நாட்களுக்குப் பிறகே அவரது மருத்துவ அறிக்கை கிடைக்கும். எனவே அதன் பிறகு நாங்கள் ஒரு அழைப்பை விடுப்போம். அவரது அறிக்கை கிடைத்தவுடன் தான் எதைப் பற்றியும் தெளிவாக கூற முடியும் என டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement