டி20 உலகக்கோப்பையில் பும்ராவிற்கு பதில் விளையாடப்போவது யார்? – ரோஹித் சர்மா அளித்த பதில் இதோ

Bumrah
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா ஐபிஎல் தொடருக்கு பிறகு காயம் காரணமாக தொடர்ச்சியாக அவதிப்பட்டு வந்தார். நடைபெற்று முடிந்த ஆசியக் கோப்பை தொடரிலும் அவர் காயம் காரணமாக விளையாடவில்லை. அவர் விளையாடாததே இந்திய அணியின் தோல்விக்கான காரணமாக அப்போது பேசப்பட்டது. ஆனால் டி20 உலக கோப்பை தொடருக்குள் அவர் நிச்சயம் மீண்டு வந்து விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அதன்படியே காயத்திலிருந்து பும்ரா குணமடைந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார்.

Bumrah

- Advertisement -

அதன் காரணமாக அண்மையில் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இடம் பெற்றிருந்த அவர் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் மீண்டும் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த தொடரில் இருந்து வெளியேறினார். பின்னர் அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் மிகப்பெரிய பிரச்சினையாக மாறி இருப்பதால் டி20 உலக கோப்பையை தொடரையும் தற்போது பும்ரா தவற விட்டுள்ளார்.

இதன் காரணமாக டி20 உலக கோப்பையில் அவர் இல்லாமல் இந்திய அணி எவ்வாறு செயல்பட போகிறது என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது. அதேபோன்று அவர் இல்லாதது இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

IND Japrit Bumrah

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் ரோகித் சர்மா போட்டி முடிந்த பிறகு பல்வேறு விஷயங்கள் குறித்து வெளிப்படையாக தனது கருத்தினை பகிர்ந்து கொண்டார். அதில் பும்ரா குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில் கூறியதாவது :

- Advertisement -

பும்ரா இந்த டி20 உலக கோப்பையில் விளையாட முடியாதது உண்மையிலேயே இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு தான். ஆனாலும் அவருக்கு சரியான மாற்றுவீரரை நாங்கள் தற்போது தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதன்படி பும்ராவிற்கு பதிலாக அணியில் இடம்பெறப் போகும் அந்த பவுலர் நிச்சயம் ஆஸ்திரேலிய மைதானங்களில் பந்து வீசிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : அந்த பையனை போட்டு இப்படி குழப்பினா அவன் என்ன செய்வான் பாவம் – இளம்வீரருக்காக குரல் கொடுத்த அஜய் ஜடேஜா

ஆனாலும் அந்த பவுலர் யார் என்று தற்போது உறுதியாக கூற முடியாது. நிச்சயம் இன்னும் ஓரிரு தினங்களில் நாங்கள் ஆஸ்திரேலியா புறப்படும் முன்னர் அந்த வீரர் யார் என்று தெரிய வரும். அதுவரை நீங்கள் பொறுமை காத்திருக்க வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement