நாளைய போட்டியில் அந்த முக்கியமான உலகசாதனையை இந்திய அணி செய்யுமா? – டிராவிட் விளக்கம்

Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை முதல் நடைபெற உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நாளை துவங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஏனெனில் இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

INDvsRSA toss

- Advertisement -

இதனால் கே.எல் ராகுல் தலைமையிலான இளம் இந்திய அணியே தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. எனவே அனுபவம் வாய்ந்த தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து இந்திய அணி எவ்வாறு செயல்படப் போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் நிலவி வருகிறது.

இந்நிலையில் தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 12 வெற்றிகளைப் பெற்றிருக்கும் இந்திய அணி தனது 13-வது வெற்றியை பெற்றால் உலக சாதனையை நிகழ்த்தும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த போட்டியில் தோல்வி அடையும் பட்சத்தில் அந்த உலக சாதனை நடத்தப்படாமலும் போகலாம். இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்தும் இந்த உலக சாதனை குறித்தும் பேசியுள்ள தலைமை பயிற்சியாளர் டிராவிட் கூறுகையில் :

Indian Team

நாங்கள் நாளைய போட்டியில் வெற்றி பெற்று உலக சாதனை படைப்பது குறித்து கவனம் செலுத்தவில்லை. என்னை பொருத்தவரை தனிப்பட்ட சாதனைகளையும், எண்களையும் நான் எப்போதுமே அது குறித்து கவலைப்படுவதில்லை. நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற விரும்புகிறோம். அது எந்த போட்டியாக இருந்தாலும் சரி இந்திய அணி களம் இறங்கும் போது அந்த போட்டியில் இருந்து வெற்றியுடன் திரும்ப வேண்டும் என்பது மட்டுமே எங்கள் அனைவரது இலக்கு.

- Advertisement -

அந்த வகையில் இந்த தொடரிலும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற முயற்சி செய்கிறோம். வலுவான தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக களமிறங்கும் போது நம்முடைய பலம் என்ன என்பது தெரியவரும். இதுவரை இந்த தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் இளம் வீரர் இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று டிராவிட் கூறினார்.

இதையும் படிங்க : உம்ரான் மாலிக்கை விட நாளைய போட்டியில் விளையாட இவருக்குத்தான் அதிக வாய்பிருக்காம் – வெளியான தகவல்

நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால் வெற்றி பெறுவோம். அதேவேளையில் மோசமாக விளையாடினால் தோல்வி பெறுவோம் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement