உம்ரான் மாலிக்கை விட நாளைய போட்டியில் விளையாட இவருக்குத்தான் அதிக வாய்பிருக்காம் – வெளியான தகவல்

Practice
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை முதல் நடைபெற உள்ளது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதலாவது டி20 போட்டியானது நாளை டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஏற்கனவே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் இரு அணி வீரர்களும் தற்போது நாளைய போட்டியை எதிர்கொள்ள முழுவதுமாக தயாராகி விட்டார்கள் என்றே கூறலாம். இந்நிலையில் நாளைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறப்போகும் வீரர்கள் யார் யார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

INDvsRSA toss

ஏனெனில் இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் கே.எல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த தொடரில் பங்கேற்க உள்ளது. இதன் காரணமாக நாளைய போட்டியில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. அதே போன்று இந்திய அணியின் பந்துவீச்சு துறையிலும் பும்ரா, ஷமி போன்றவர்களுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக அவர்களது இடத்தை நிரப்பப் போகும் வீரர்கள் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அந்த வகையில் அணியின் அனுபவ வீரர் புவனேஷ்வர் குமார் இருந்தாலும் மீதமுள்ள இடங்களில் விளையாடப் போகும் வேகப்பந்து வீச்சாளர்கள் யார் என்ற கேள்வியே அதிகம் உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் புவனேஸ்வர் குமாருடன், ஆவேஷ் கான், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக விளையாடுவார்கள் என்று தெரிகிறது.

arshdeep

அதேவேளையில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளருக்கான இடத்தில் இரண்டு வீரர்கள் போட்டிக்கு உள்ளனர். அதில் குறிப்பாக ஜம்மு காஷ்மீர் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் உம்ரான் மாலிக் ஐபிஎல் தொடரில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பந்துவீசி அசத்தியவர். பயிற்சியின் போதும் அவர் அதிவேக பந்தினை வீசியுள்ளதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்று ஆதரவு குவிந்து வருகிறது.

- Advertisement -

அதேவேளையில் பயிற்சியின்போது அசத்தலாக பந்துவீசி வரும் அர்ஷ்தீப் சிங்கிற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக டெத் ஓவர்களில் அற்புதமாக வீசிய அர்ஷ்தீப் மிகவும் குறைவான ரன்களையே இறுதிநேரத்தில் விட்டுக் கொடுத்திருப்பதால் அவரையே டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக இந்திய அணி விளையாட வைக்கும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : பயிற்சியின் போதே உலகசாதனையை நிகழ்த்திய டிராவிடை திகைக்க வைத்த உம்ரான் மாலிக் – வைரலாகும் புகைப்படம்

அர்ஷ்தீப் சிங் நடைபெற்று முடிந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும் அவரது எக்கானமி மிகவும் அருமையாக இருப்பதனால் அவரையே இந்திய அணி பிளேயிங் லெவனில் இணைக்கும் என்றும், நிச்சயம் அவருக்கே இந்த தொடரில் அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement