சேன்ஸ் வேணுமா ? அப்போ பர்ஸ்ட் இதை பண்ணுங்க. நான் ரவி சாஸ்திரி கிடையாது – டிராவிட் தடாலடி

Dravid
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது பல இளம் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் அணியில் ஏகப்பட்ட வீரர்கள் தேர்வு செய்யப்படாமல் வெளியிலேயே உள்ளனர். மேலும் சீனியர் வீரர்களுக்கும் மோசமான பார்ம் மற்றும் காயம் காரணமாக அவ்வப்போது பாதிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக இந்திய அணி தேர்வு எப்போதெல்லாம் நடை பெறுகிறதோ அப்போதெல்லாம் பல மாற்றங்கள் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. மேலும் அடுத்து வரும் தென் ஆப்பிரிக்க தொடருக்கான அணி தேர்விலும் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கும் என்று தெரிகிறது.

INDvsRSA

- Advertisement -

இந்நிலையில் இனி எந்த ஒரு வீரரும் அணிக்கு தேர்வு வேண்டுமெனில் அதற்கு புதிய சில கட்டுப்பாடுகளை இந்திய அணி பயிற்சியாளர் டிராவிட் கொண்டு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதன்படி இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் சீனியர் வீரர்களுக்கு அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் சில தேர்வுகளில் ஏற்படும் முரண்பாடு காரணமாக இந்திய அணி தோல்வியையும் சந்திக்கிறது. இதன் காரணமாக தற்போது டிராவிட் இந்த புதிய தேர்வு முடிவினை கொண்டுவந்துள்ளார்.

அதன்படி இந்திய அணியில் விளையாடி கொண்டிருக்கும் வீரர் ஒருவர் பார்ம் அவுட் காரணமாகவோ அல்லது காயம் காரணமாகவோ அணியில் இருந்து வெளியேற்றப்படும் பட்சத்தில் நேரடியாக மீண்டும் அணிக்குள் இணைய முடியாது என்றும் விஜய் ஹசாரே, சையது முஷ்டாக் அலி, ரஞ்சி கோப்பை போட்டி ஆகிய உள்ளூர் போட்டிகளில் ஏதாவது ஒன்றில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களை நிரூபித்தால் மட்டுமே இனி மீண்டும் இந்திய அணிக்கு தேர்வாகி வரமுடியும் என்று டிராவிட் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ind 1

மேலும் ஒரு வீரர் வெளியேறிய பின் மீண்டும் ஒரு சில போட்டிகளில் அணிக்கு திரும்புவது நல்லதல்ல. முழுமையாக வீரர்கள் தயாராகி தங்களது திறமையை நிரூபித்தால் மட்டுமே இனி அணிக்கு திரும்ப முடியும் என்ற முடிவை எடுத்துள்ளார். இதற்கு முன்னர் பயிற்சியாளராக இருந்த ரவிசாஸ்திரி பெரிய பெரிய வீரர்கள் காயத்தினாலோ அல்லது பார்ம் அவுட் காரணமாகவோ வெளியேறினாலும் மீண்டும் அடுத்த தொடருக்கான அணியில் இடம் பிடித்து வந்தனர். ஆனால் டிராவிட் தற்போது பயிற்சியாளராக உள்ளதால் இந்த திட்டம் எல்லாம் செல்லாது என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணி தொடர்ந்து செய்யும் ஒரே தவறு இதுதான். அதை மாற்றினா தான் ஜெயிக்க முடியும் – லக்ஷ்மனன் பேட்டி

இந்திய அணியில் இருந்து ஒரு வீரர் ஏதாவது ஒரு காரணத்தினால் வெளியேறினால் நிச்சயம் அவர் தன்னுடைய திறமையை உள்ளூர் போட்டிகளில் நிரூபித்தால் மட்டுமே அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என்பதில் டிராவிட் திட்டவட்டமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இனி இந்திய அணிக்கு தேர்வாக வேண்டும் எனில் திறமையை நிரூபித்தால் மட்டுமே வாய்ப்பு என்ற பொதுவான ஒரு நடைமுறைத் திட்டத்தை டிராவிட் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement