உண்மையா சொல்றேன். அஷ்வின் செய்த இந்த சாதனை மிகப்பெரியது – பாராட்டிய ராகுல் டிராவிட்

Dravid-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸின் போது 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், இரண்டாவது இன்னிங்சிலும் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இப்படி 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தினார். அதன்படி ஹர்பஜன் சிங்கின் 417 விக்கெட்டுகள் சாதனையை முந்திய அஷ்வின் தற்போது 419 விக்கெட்டுகள் உடன் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

ashwin 3

- Advertisement -

இவரது இந்த சிறப்பான சாதனைக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அஷ்வின் குறித்து பேசிய அவர் : ஹர்பஜன் சிங் ஒரு சிறப்பான பந்து வீச்சாளர். நான் விளையாடிய காலத்தில் அவருடன் நிறைய போட்டிகளில் விளையாடி உள்ளேன்.

அவர் இந்திய அணிக்காக ஒரு சிறப்பான பந்து வீச்சாளராக திகழ்ந்தார். அதனை தற்போது தொடர்ந்து வரும் அஷ்வின் இந்திய அணிக்காக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். 80 போட்டிகளிலேயே அஷ்வின் 419 விக்கெட்டுகளை எடுத்து மிகப்பெரிய சாதனை அவர் ஹர்பஜனின் சாதனையை 23 போட்டிக்கு முன்பாக முடித்துள்ளது மிகப்பெரிய ஒரு சாதனை என்று குறிப்பிட்டுள்ளார்.

ashwin

மேலும் பேசிய அவர் : அஷ்வின் எப்போதுமே இந்திய அணிக்கு ஒரு மேட்ச் வின்னராக திகழ்ந்துள்ளார். முதல் போட்டியின் 2வது இன்னிங்சில் கூட தொடர்ச்சியாக பந்துவீசிய அவர் தனது பந்து வீச்சில் ஏகப்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தார். அது மட்டுமின்றி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் அவர் தொடர்ந்து பந்துவீசினார்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணிக்கு சாதகமாக மைதானங்களை தயார் செய்ய வேண்டாம் – மீண்டும் மனதை வென்ற டிராவிட்

அஷ்வினின் இந்த செயல்பாடு அவர் எவ்வளவு திறன் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் என்பதை வெளிக்காட்டுகிறது. நிச்சயம் 80 போட்டிகளில் அஷ்வின் 400 விக்கெட்டுகளுக்கு மேல் கடந்துள்ளது மிகப் பெரிய சாதனை தான். அவரை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது என்று டிராவிட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement