இந்திய அணிக்கு சாதகமாக மைதானங்களை தயார் செய்ய வேண்டாம் – மீண்டும் மனதை வென்ற டிராவிட்

Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கான்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி கடைசி நாள் வரை விறுவிறுப்பாக சென்ற வேளையில் இறுதியில் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி போட்டி சமனில் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து போட்டி சிறப்பாக நடைபெற காரணமாக இருந்த மைதான பராமரிப்பாளரை அழைத்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 35 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக உத்தரப்பிரதேச மாநில கிரிக்கெட் நிர்வாகம் ஒரு தகவலை வெளியிட்டு இருந்தது.

dravid

- Advertisement -

அந்த விவகாரம் இணையத்தில் வைரலான நிலையில் தற்போது அடுத்ததாக டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான மும்பை ஆடுகளம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து டிராவிட் தற்போது பேசி உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த போட்டியில் எந்த அணிக்கும் சாதகமாக ஆடுகளம் இருக்கக்கூடாது என்றும் இரு அணிகளுக்குமே சவால் நிறைந்த ஆடுகளத்தை தயார் செய்யுமாறு டிராவிட் கேட்டுக் கொண்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் எப்போதுமே வெளிநாட்டு அணிகள் இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது இந்திய அணிக்கு அதிக சாதகமாக சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் மைதானங்களே அமைக்கப்பட்டு வருகின்றன என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

dravid 1

இந்நிலையில் மும்பை போட்டிக்கான ஆடுகளத்தை இரு அணிகளுக்குமே சவாலான ஒரு ஆட்டத்தை விளையாடும் வகையில் தயார் படுத்தி தருமாறு டிராவிட் கேட்டுக்கொண்டிருப்பது மீண்டும் கிரிக்கெட் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க :ஹானேவின் பேட்டிங் பெயிலியருக்கு இதுதான் காரணம். தப்பு இங்க தான் நடக்குது – பிரக்யான் ஓஜா பேட்டி

ஏனெனில் அண்மையில் நடைபெற்ற இந்தியாவில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிய போது இந்திய அணிக்கு சாதகமாக மைதானம் ஒரு தலைப்பட்சமாக தயார் செய்யப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது. டிராவிடின் இந்த நடவடிக்கையும் தற்போது வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement