- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் தமிழக வீரரான இவர் நிச்சயம் விளையாடுவார் – டிராவிட் போட்டுள்ள ஸ்கெட்ச்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியானது தங்களது முதல் போட்டியில் நாளை பாகிஸ்தான் அணியை மெல்போர்ன் மைதானத்தில் எதிர்கொள்ள காத்திருக்கிறது. ஏற்கனவே இந்த போட்டி குறித்தான அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினையும், எதிர்பார்ப்பினையும் பெற்றுள்ள இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை அசத்தலாக துவங்கப்போகும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் நாளை நடைபெற இருக்கும் இந்த முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதும் அனைவரது மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் தற்போதுள்ள இந்திய அணி மிக பலம் வாய்ந்த அணியாக காணப்பட்டாலும் வீரர்களுக்கு இடையே பிளேயிங் லெவனில் இடம் பிடிக்கவும் கடுமையான போட்டி நிலவுகிறது. அதிலும் குறிப்பாக தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருக்கிடையே மிகப்பெரிய மோதல் இருந்து வரும் வேளையில் தினேஷ் கார்த்திக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் நாளைய பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் அவர்கள் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நாளைய போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களாக அக்சர் பட்டேல் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை விளையாட வைக்கவே இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏனெனில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் அவசியம் என்கிற காரணத்தினால் அக்சர் பட்டேல் அந்த வரிசையில் விளையாட இருக்கிறார். பவுலிங்கில் மிகச் சிறப்பாக செயல்படும் அவர் பேட்டிங்கிலும் கை கொடுக்கக் கூடியவர் என்பதனால் இந்திய அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் பட்சத்தில் அக்சர் படேல் மிடில் ஆர்டரில் இடது கை ஆட்டக்காரராக விளையாட இருக்கிறார்.

- Advertisement -

அதே வேலையில் சாஹலுக்கு பதிலாக அஸ்வினை சேர்க்க காரணம் யாதெனில் : பாகிஸ்தான் அணியின் மூன்று இடது கை பேட்ஸ்மேன்கள் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க : பாகிஸ்தான் டீமோட ஸ்ட்ரென்த்தே அந்த விஷயம் தான். ஆனா அதையும் நாங்க முறியடிப்போம் – ரோஹித் நம்பிக்கை

மேலும் பாகிஸ்தானை வீழ்த்த இந்த சில திட்டங்களை இந்திய அணியின் பயிற்சியாளர் டிராவிட் தான் வகுத்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by