பாகிஸ்தான் டீமோட ஸ்ட்ரென்த்தே அந்த விஷயம் தான். ஆனா அதையும் நாங்க முறியடிப்போம் – ரோஹித் நம்பிக்கை

Rohit
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ஆம் தேதி துவங்கிய டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தகுதிச்சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் துவங்கி நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் நியூசிலாந்து அணி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது.

Babar Azam Rohit Sharma IND vs PAK

- Advertisement -

இந்நிலையில் நாளை அக்டோபர் 23-ஆம் தேதி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த போட்டி குறித்தான அட்டவணை வெளியானதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இந்த போட்டியில் நாளை வெற்றி பெறப்போவது யார் என்ற கேள்வி அதிகளவில் எழுந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த போட்டியில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள இந்த போட்டிக்கு முன்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரோகித் சர்மாவிடம் :

Shaheen-afridi-1

ஆசிய கோப்பை தொடரில் அடுத்த ஆண்டு இந்திய அணி பாகிஸ்தான் சென்று பங்கேற்கவில்லை என்றால் அதற்கு அடுத்து இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு இந்தியாவிற்கு பாகிஸ்தான் வரமாட்டோம் என்பது குறித்து அளித்த கருத்திற்கு என்ன பதில் கூற விரும்புகிறீர்கள்? என ரோகித்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரோகித் கூறுகையில் :

- Advertisement -

என்னுடைய முழு கவனமும் தற்போது இந்த டி20 உலக கோப்பையில் மட்டும் தான் இருக்கிறது. பின்னால் நடக்கப்போவது குறித்து நான் யோசிக்க போவதில்லை என்று கூறியிருந்தார். அதனை தொடர்ந்து பாகிஸ்தானை வீழ்த்தும் திட்டம் குறித்து பேசிய அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : AUS vs NZ : ஆஸியை சொந்த மண்ணில் பழிக்கு பழி – 15 வரலாற்றை மாற்றி எழுதிய நியூசிலாந்து புதிய சாதனை

பாகிஸ்தான அணியில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்களது பலமே வேகப்பந்து வீச்சு தான். அதே வேளையில் நமது அணியில் நல்ல பேட்ஸ்மேன்கள் இருப்பதினால் நிச்சயம் அவர்களை எதிர்கொண்டு சிறப்பாக ரன்களை குவிப்போம் என்று ரோகித் சர்மா நம்பிக்கை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement