- Advertisement -
இந்திய கிரிக்கெட்

காமெடி பண்றிங்களா.. சதமடித்த சாம்சனை கழற்றி விட்டு அவரை தேர்ந்தெடுத்தது ஏன்? முன்னாள் வீரர் விளாசல்

விரைவில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. அந்தத் தொடர்களுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடருக்கான இந்தியனின் கேப்டனாக சூரியகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அந்த அணியில் சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் அசத்திய ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் ஷர்மா ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை. குறிப்பாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில்லை விட நல்ல புள்ளிவிவரங்களை வைத்திருக்கும் ருதுராஜ் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதே போல அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார்.

- Advertisement -

காமெடி பன்றிங்களா:
அந்த அணியில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் அந்த அணியில் கேரளாவை சேர்ந்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் மீண்டும் கழற்றி விடப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் அறிமுகமானது முதல் இதுவரை நிலையான வாய்ப்புகள் கிடைக்காமல் திண்டாடி வரும் அவர் கிடைக்கும் வாய்ப்புகளில் அசத்தலாகவே செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக இலங்கை ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக தேர்வாகியுள்ள ரிஷப் பண்ட் 26 இன்னிங்ஸில் 865 ரன்களை 35 என்ற சுமாரான சராசரியில் எடுத்துள்ளார். மறுபுறம் 14 ஒருநாள் இன்னிங்ஸில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 14 இன்னிங்ஸில் 510 ரன்களை 57 என்ற சராசரியில் எடுத்துள்ளார். அதை விட தென்னாபிரிக்காவில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் சதமடித்த சஞ்சு சாம்சன் இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

ஆனால் அப்படி இந்தியா விளையாடிய கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்த அவருக்கு அடுத்ததாக நடைபெறும் இலங்கைத் தொடரில் பெஞ்சில் அமர்ந்திருக்கும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை என்பது ரசிகர்களை கோபமடைய வைக்கிறது. இந்நிலையில் கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்து வெற்றி பெற வைத்த சஞ்சு சம்சானை கழற்றி விட்டு புதுமுகமான சிவம் துபேவை தேர்வு செய்துள்ளது கேலிக்குரியது என டோட்டா கணேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தாங்க ஆதாரம்.. சுயநலமா விளையாடிய கில்லை விட ருதுராஜ் மோசமா?தேர்வுக்குழுவை விளாசும் ரசிகர்கள்

முன்னாள் இந்திய வீரரான அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக சிவம் துபே தேர்வு செய்யப்பட்டுள்ளது கேலிக்குரியது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தனது கடைசி தொடரில் சஞ்சு சாம்சன் சதமடித்தார். ஆனாலும் அவர் ஏன் இப்படி எப்போதும் கழற்றி விடப்படுகிறார்? எனது இதயம் இந்த இளம் பையனை பார்த்து வருத்தப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

- Advertisement -