இந்தாங்க ஆதாரம்.. சுயநலமா விளையாடிய கில்லை விட ருதுராஜ் மோசமா?தேர்வுக்குழுவை விளாசும் ரசிகர்கள்

Ruturaj 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் வென்றது. அடுத்ததாக இலங்கைக்கு செல்லும் இந்தியா அங்கே 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அந்த 2 தொடர்களுக்கான அணியையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அதில் ஒருநாள் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி போன்ற சில சீனியர் வீரர்களும் இளம் வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியாவை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு ரோஹித்துக்குப் பின் சூர்யகுமார் யாதவை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. அந்த அணியில் ஜெய்ஸ்வால், ரியான் பராக், ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

ரசிகர்கள் விளாசல்:
ஆனால் அந்த அணியில் ருதுராஜ் கெய்க்வாட் கழற்றி விடப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்துள்ளது. ஏனெனில் தோனியின் நம்பிக்கையை பெற்று சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவரது தலைமையில் ஏற்கனவே இந்தியா 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றது. அப்படிப்பட்ட அவர் தான் உண்மையில் ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அதை செய்யாத தேர்வுக் குழு சுப்மன் கில்லை கேப்டனாக அறிவித்தது. மறுபுறம் அந்தத் தொடரில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த போது 2வது போட்டியில் சதமடித்த அபிஷேக் ஷர்மா இந்தியாவை வெற்றி பெற வைத்தார். ஆனால் துவக்க வீரராகவே விளையாடிய அனுபவம் கொண்ட அவருக்கு 3வது போட்டியில் ஓப்பனிங் இடத்தை கொடுக்காத சுப்மன் கில் தாமே சுயநலமாக ஓப்பனிங்கில் விளையாடினார்.

- Advertisement -

அதை விட 4வது போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வாலை சதமடிக்க விடாத அவர் தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்து கொண்டார். அதனால் சுப்மன் கில் சுயநலமாக நடந்து கொண்டதாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் அப்படிப்பட்ட அவரை இலங்கை டி20 தொடரில் துணைக் கேப்டனாக நியமித்துள்ள தேர்வுக்குழு ஜிம்பாப்வே மண்ணில் அசத்திய ருதுராஜை பேக்-அப் வீரராக கூட தேர்ந்தெடுக்கவில்லை.

அதற்கு ஆதாரமாக கடைசி 7 போட்டிகளில் 356 ரன்களை 71.2 என்ற சராசரியில் எடுத்துள்ள ருதுராஜ் ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் 8வது பேட்ஸ்மேனாக ஜொலித்து வருகிறார். அது போக 19 சர்வதேச டி20 இன்னிங்ஸில் 505 ரன்களை 29.70 என்ற சராசரியில் 139.50 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ள சுப்மன் கில்லை விட ருதுராஜ் 20 இன்னிங்ஸில் 633 ரன்களை 39.56 என்ற சராசரியில் 143.50 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: பாண்டியாவை கழற்றி விட்டு பிரிந்த மனைவி.. குழந்தை யாருடன் இருப்பார்? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆனாலும் அவரை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு அறிமுக வீரர் அபிஷேக் ஷர்மாவுக்கும் டாடா காட்டியுள்ளது. இது போக கடந்த டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்க மண்ணில் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் சதமடித்தார். ஆனால் அவருக்கு இலங்கை ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையெல்லாம் பார்க்கும் ரசிகர்கள் இது என்ன அநியாயம்? கம்பீரும் தன்னுடைய வேலையை ஆரம்பித்து விட்டாரா? என்று விமர்சித்து வருகின்றனர்.

Advertisement