பென் ஸ்டோக்ஸ் உடன் தகுதியற்ற ஹர்டிக் பாண்டியாவை ஒப்பிடுவது நியாயமல்ல – முன்னாள் பாக் வீரர் கருத்து

Ben Stokes Hardik Pandya
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் பின்தங்கியுள்ளது. மொகாலியில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தும் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கியதால் தோல்வியை சந்தித்த இந்தியா எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக முதல் போட்டியில் ராகுல், சூரியகுமார் யாதவ் ஆகியோருக்கு அதிரடி ஆட்டத்துக்கு பின்பும் 16 ஓவரில் 145/5 என தடுமாறிய இந்தியா 200 ரன்களை தொடுமா என்ற கேள்வி எழுந்தபோது பட்டைய கிளப்பிய ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் பறக்கவிட்ட ஹாட்ரிக் சிக்ஸர்கள் உட்பட 7 பவுண்டரி 5 சிக்சருடன் 71* (30) ரன்களை 236.67 என்ற அற்புதமான ஸ்டிரைக் ரேட்டில் விளாசி சூப்பர் பினிசிங் கொடுத்தார்.

- Advertisement -

அறிமுகமான ஆரம்ப காலத்தில் மிகச் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா 2017க்குப்பின் 3 வகையான இந்திய அணியிலும் ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் நல்ல வேகப்பந்து ஆல் ரவுண்டர் கிடைத்து விட்டார் என ரசிகர்கள் மகிழும் அளவுக்கு அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதனால் இந்திய அணியின் லேட்டஸ்ட் நம்பர் ஒன் ஆல் ரவுண்டராக உருவெடுத்த அவர் 2019 உலகக் கோப்பைக்கு பின் சந்தித்த காயத்தால் பந்து வீச முடியாமல் பேட்டிங்கிலும் ரன்களை குவிக்க தடுமாறினார்.

சூப்பர் ஆல் ரவுண்டர்:
அந்த தடுமாற்றம் 2021 டி20 உலக கோப்பையிலும் எதிரொலித்ததால் அதிரடியாக நீக்கப்பட்ட அவர் அதற்காக மனம் தளராமல் ஐபிஎல் 2022 தொடரில் மிகச் சிறந்த ஆல் ரவுண்டராகவும் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பொறுப்பில் அணியை சிறப்பாக வழி நடத்தி முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று தன்னை மீண்டும் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டர் என நிரூபித்தார். அதனால் மீண்டும் கம்பேக் கொடுத்த அவர் அதன் பின் நடந்த தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், சமீபத்திய ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக வென்றது வரை முக்கிய வெற்றிகளுக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டு பழைய பாண்டியாவாக பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

Stokes-1

பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய 2 துறைகளுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் விலை மதிப்பு மிக்க இந்திய வீரராக திகழும் அவர் தற்சமயத்தில் உலக அளவில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ்’க்கு நிகரான நம்பர் ஒன் ஆல் ரவுண்டராகவும் போற்றப்படுகிறார். ஆனால் 2019 உலகக் கோப்பை, ஹெண்டிங்லே டெஸ்ட் போன்ற சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த பென் ஸ்டோக்ஸ் உடன் இதுவரை இருதரப்பு தொடர்களில் மட்டும் வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வரும் ஹர்டிக் பாண்டியாவை ஒப்பிடுவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரசித் லதீப் தெரிவித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் நல்ல வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவரது சிறந்த ஆட்டம் இருதரப்பு தொடர்களில் மட்டுமே வெளிப்படுகிறது. இருதரப்பு தொடர்களில் அவை வெளிப்படுவது சாதாரணமாகும். சமீபத்திய ஆசிய கோப்பையில் அவர் வெளிப்படுத்திய செயல்பாடுகளும் அதனுள் அடங்கும். மேலும் நான் இன்றைய (மொஹாலி) போட்டியை பற்றி பேசவில்லை ஆனால் பென் ஸ்டோக்ஸ் தன்னை நிரூபித்தவர். அவர் உலக கோப்பையை வென்று இங்கிலாந்துக்காக சில சரித்திர டெஸ்ட் போட்டிகளை வென்று கொடுத்துள்ளார்”

latif

“எனவே களத்தில் வெளிப்படுத்தும் சில செயல்பாடுகளை வைத்து அவரை ஸ்டோக்ஸ் உடன் ஒப்பிடக்கூட முடியாது. ஏனெனில் உலகக்கோப்பை உலகக்கோப்பை தான். அந்த வகையில் பாண்டியாவை விட பென் ஸ்டோக்ஸ் பல மடங்கு முன்னிலையில் உள்ளார். இருப்பினும் பென் ஸ்டோக்ஸ் விட ஹர்திக் பாண்டியா சில இன்னிங்சில் அபாரமாக விளையாடியுள்ளார் என்பது உண்மை”

இதையும் படிங்க: IND vs AUS : ஒன்னு சரியாக பயன்படுத்துங்க, இல்ல டிகே’வை கழற்றிவிடுங்க – அணி நிர்வாகத்தை சாடும் 2 முன்னாள் வீரர்கள்

“ஆனாலும் பென் ஸ்டோக்ஸ் விட சிறந்த இன்னிங்ஸ் விளையாடுவதற்கும் பென் ஸ்டோக்ஸை விட சிறந்த வீரராக இருப்பதற்கும் வித்தியாசங்கள் உள்ளன” என்று கூறினார். அதாவது இரு தரப்பு தொடர்களில் மட்டும் வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் பாண்டியா நல்ல வீரர் என்றாலும் உலக கோப்பையை வென்ற பென் ஸ்டோக்ஸ் உடன் ஒப்பிடுவதற்கு தகுதியற்றவர் என்று ரசித் லதீப் தெரிவிக்கிறார்.

Advertisement