IND vs AUS : ஒன்னு சரியாக பயன்படுத்துங்க, இல்ல டிகே’வை கழற்றிவிடுங்க – அணி நிர்வாகத்தை சாடும் 2 முன்னாள் வீரர்கள்

Dravid
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் பின்தங்கியுள்ளது. இதனால் எஞ்சிய 2 போட்டிகளில் வென்றால் மட்டுமே இத்தொடரை வெல்ல முடியும் என்ற கட்டாயத்திற்கும் இந்தியா தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 209 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா பந்துவீச்சில் வள்ளல் பரம்பரையாக செயல்பட்டு வெற்றியை ஆஸ்திரேலியாவுக்கு தாரை வார்த்தது.

Rohit Sharma Dinesh Karthik Umesh Yadav

- Advertisement -

அப்போட்டியில் நிறைய கேப்டன்ஷிப் குளறுபடிகளை செய்த ரோகித் சர்மா பேட்டிங் வரிசையில் தினேஷ் கார்த்திக்கு முன்பாக அக்ஷர் பட்டேலை அனுப்பிய தவறை 208 ரன்கள் குவிக்கப் பட்டதால் பெரும்பாலான ரசிகர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் கடுமையாக உழைத்து 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்துள்ள தினேஷ் கார்த்திக் திறமை மீது கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் தொடர்ந்து நம்பிக்கை வைக்காமல் இவ்வாறு செயற்பட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். முதலில் ஐபிஎல் தொடர் முடிந்ததும் நடந்த தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் இதே போல் தினேஷ் கார்த்திக்க்கு முன்பாக அக்சர் படேலை ரிஷப் பண்ட் – ராகுல் டிராவிட் கூட்டணி அனுப்பியது நிறைய விமர்சனங்களை எழுப்பியது.

சரியாக பயன்படுத்துங்க:
சரி ரிஷப் பண்ட் கேப்டன்ஷிப் அனுபவமில்லாதவர் என்பதால் அவ்வாறு செய்தது பரவாயில்லை என்று பார்த்தால் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அதே வேலையை கேப்டன் ரோகித் சர்மா செய்தார். அந்த நிலைமையில் மொஹாலியில் நடைபெற்ற இப்போட்டியில் 14வது ஓவரில் அக்சர் படேல் 6வதாக களமிறங்கிய நிலையில் 19வது ஓவரில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் ஒருசில பந்துகளை எதிர்கொண்டு செட்டிலாவதற்கு முன்பாகவே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற கட்டாயத்தில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Hayden

அக்சர் படேலை விட திறமையும் அனுபவமும் கொண்டிருந்தும் கடைசி சில ஓவர்களில் மட்டுமே அவர் சிறப்பாக செயல்படக் கூடியவர் என்று அணி நிர்வாகம் குறைத்து மதிப்பிடுவதே இதற்கு காரணமாகும். இந்நிலையில் பினிஷர் என அறியப்படும் தினேஷ் கார்த்திக்கின் வேலையும் இடமும் கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவிக்கும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்யூ ஹைடன் அவர் மேல் வரிசையிலும் களமிறங்கலாம் என்று கூறியுள்ளார். இது பற்றி இத்தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“தினேஷ் கார்த்திக்கின் வேலையைப் பற்றி நான் நினைக்கிறேன். அவருடைய வேலையை வைத்து அவர் அங்கே (மேல் வரிசையில்) ஏன் பேட்டிங் செய்வதில்லை என்று நான் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். இது எனக்கு எந்த அர்த்தத்தையும் கொடுக்கவில்லை. இங்கே நான் தினேஷ் கார்த்திக்கை அவமரியாதை செய்யவில்லை. ஆனால் அவர் அதிகமாக பேட்டிங் செய்ய வேண்டும். சொல்லப்போனால் அது நேர்மாறானது. நல்ல வீரரான அவரால் எந்த இடத்திலும் களமிறங்கி அதே வகையான ஷாட்களை அடிக்க முடியும். இருப்பினும் அவருடைய பினிஷர் எனும் வேலை பற்றி நான் கேள்வி எழுப்புகிறேன். என்னைப் பொறுத்தவரை அவர் பேட்டிங் வரிசையில் சற்று மேலே வரவேண்டும் என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.

Agarkar

இது பற்றி அவருடன் பேசிய முன்னாள் இந்திய வீரர் அஜித் அகர்கர் பேசியது பின்வருமாறு. “தினேஷ் கார்த்திகை பயன்படுத்தும் விதம் வேடிக்கையாக உள்ளது. அவர் மேல் வரிசையில் பேட்டிங் செய்ய தகுதியானவர். 16வது ஓவருக்கு பின்பு தான் வரவேண்டும் என்ற அவசியமில்லை. இருப்பினும் தற்போது அக்சர் படேல் முன்னேற்றமடைந்துள்ளதால் கடைசி கட்ட நேரங்களை தினேஷ் கார்த்திக் சமாளிப்பார் என்று அவர்கள் நம்புவதாக தெரிகிறது”

“ஆனால் ரிஷப் பண்ட்க்கு பதிலாக விளையாடும் 11 பேர் அணியில் அவரை விளையாடும் நீங்கள் முன்கூட்டியே களமிறக்குவதை பற்றி சிந்திக்க வேண்டும். அவருக்கு முன்பாக அக்சர் படேல் பேட்டிங் செய்யும் இந்த கதை தென் ஆப்பிரிக்க தொடரிலும் நடைபெற்றது, இப்போதும் நடைபெறுகிறது” என்று கூறினார். அதாவது நல்ல திறமையுள்ள தினேஷ் கார்த்திக்கை போட்டியின் சூழ்நிலைக்கேற்றார் போல் தேவைப்பட்டால் மேல் பேட்டிங் வரிசையில் பயன்படுத்த வேண்டும் என இந்த முன்னாள் வீரர்கள் கூறுகின்றனர். இல்லையேல் ரிஷப் பண்ட்க்கு பதிலாக விளையாடும் அவரால் 11 பேர் அணியில் எந்த பயனுமில்லை என்றுஅவர்கள் கூறுகின்றனர்.

Advertisement