கம்பேரிஷனே கிடையாது.. என்னைக்கும் அவர் தான் எங்களோட கேப்டன்.. கேஎல் ராகுல் நெகிழ்ச்சி பேட்டி

- Advertisement -

சொந்த மண்ணில் நிறைவு பெற்ற ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தொடர்ந்து 10 போட்டிகளில் வென்று உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தியது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் 240 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி தோல்வியை சந்தித்து 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை நழுவ விட்டது.

அதனால் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் மிகுந்த ரோகித் சர்மா கூட இந்தியாவுக்கு ஐசிசி கோப்பையை வென்று கொடுக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதே சமயம் 2023 உலகக் கோப்பை தோல்வியால் பல ரசிகர்கள் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை சமூக வலைதளங்களில் நினைவு கூர்ந்து ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

- Advertisement -

ஒரே கேப்டன்:
ஏனெனில் 2007ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் ராகுல் டிராவிட் தலைமையில் உலகக் கோப்பையில் வங்கதேசத்திடம் அவமான தோல்வியை சந்தித்து வீழ்ந்து கிடந்த இந்தியாவை கேப்டனாக பொறுப்பேற்ற தோனி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2007 டி20 உலகக் கோப்பை வென்று தலை நிமிர செய்தார். அதைத்தொடர்ந்து கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து சொந்த மண்ணில் அபாரமாக கேப்டன்ஷிப் செய்த அவர் 2011 உலகக் கோப்பையை 28 வருடங்கள் கழித்து இந்தியா முத்தமிட உதவினார்.

அதன் பின் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோஹித் சர்மா, தவான், ரெய்னா, ஜடேஜா போன்ற இளம் வீரர்களை வைத்து 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அவர் உலகிலேயே 3 விதமான வெள்ளைப்பந்து ஐசிசி உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்தார். அந்த வகையில் இந்தியாவுக்கு மகத்தான வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் ஐபிஎல் தொடரிலும் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் 2017இல் கேப்டனாக விடை பெற்றாலும் இப்போதும் இந்திய அணியில் கேப்டன் என்ற பெயரை கேட்டால் தோனி தான் அனைவரது நினைவுக்கு வருவார் என்று கேஎல் ராகுல் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “எம்எஸ் தோனியுடன் யாரையும் ஒப்பிட முடியும் என்று நான் நினைக்கவில்லை”

இதையும் படிங்க: அண்டர்-19 ஆசிய கோப்பை 2023 : கடைசி நேரத்தில் ட்விஸ்ட்.. ஒரே நாளில் இந்தியா – பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பரிதாபம்

“இப்போதும் எங்களுடைய அணியில் லீடர், கேப்டன் என்ற வார்த்தைகளை சொல்லி பேசினால் எம்எஸ் தோனி தான் எங்களுடைய மனதில் முதலாவதாக வருவார்” என்று கூறினார். இதை தொடர்ந்து 2024 டி20 உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தை இந்திய அணி துவங்கியுள்ள நிலையில் தோனி 2024 ஐபிஎல் தொடரில் சென்னைக்காக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement