அஸ்வினுக்கு டீம்ல இடமில்லை.. ஒருவேளை அது நடக்கலைனாலும் வருத்தப்படாதீங்க.. ரசிகர்களுக்கு கம்பீர் முன்னெச்சரிக்கை

Advertisement

அனல் பறக்கப் போகும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. அதில் லீக் மற்றும் செமி ஃபைனல் சுற்றில் சிறப்பாக விளையாடி வெற்றி கண்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. அப்போட்டில் ஆஸ்திரேலியா தங்களுடைய 6வது கோப்பையையும் இந்தியா தங்களுடைய 3வது கோப்பையின் வெல்வதற்கு பலப்பரீட்சை நடந்துள்ளன.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட் ஆகிய துவக்க வீரர்கள் அதிரடியாக விளையாடி வெற்றிகளை பறிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். எனவே அந்த இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுப்பதற்கு தமிழகத்தை சேர்ந்த ஆஃப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது நிறைய ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

- Advertisement -

கம்பீர் முன்னெச்சரிக்கை:
இந்நிலையில் இப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடும் 11 பேர் அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு இடமில்லை என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த போட்டியில் டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தால் முதலில் கண்மூடித்தனமாக பேட்டிங் செய்யாமல் சூழ்நிலைகளை பார்த்து அதற்கு தகுந்த முடிவை இந்தியா எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதை விட இத்தொடர் முழுவதும் அபாரமாக செயல்பட்டு வெற்றி கண்ட இந்தியா ஒருவேளை ஃபைனலில் தோல்வியை சந்தித்தால் அதற்காக ரசிகர்கள் கவலைப்படக்கூடாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி முன்னெச்சரிக்கையுடன் பேசியது பின்வருமாறு. “அஸ்வின் விளையாடுவார் என்று எனக்கு தோன்றவில்லை. தற்போது சிறப்பாக செயல்படும் அணியில் நீங்கள் மாற்றங்கள் செய்யக்கூடாது என்பதால் அவருக்கான இடம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை”

- Advertisement -

“எனவே உங்களுடைய 5 பவுலர்களிடமிருந்து நீங்கள் நல்ல செயல்பாடுகளை எதிர்பாருங்கள். மேலும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து ஃபைனலில் பெரிய ரன்களை ஆரம்பத்திலேயே எடுப்பது நல்ல முடிவாக இருக்கும். ஆனால் அதை சூழ்நிலைகளை பொறுத்து எடுக்க வேண்டும். குறிப்பாக பிட்ச் அதிக ரன்கள் அடிக்கக்கூடிய அல்லது குறைந்த ரன்கள் அடிக்கக்கூடிய ஆகியவற்றில் எதற்கு சாதகமாக இருக்கிறது என்பதை பொறுத்து அந்த முடிவு இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: ஹார்டிக் பாண்டியாவின் விலகலால்.. சூரியகுமார் யாதாவிற்கு அடித்த ஜாக்பாட் – வெளியான லேட்டஸ்ட் தகவல்

“இறுதியில் பேட்டிங் மற்றும் பவுலிங் இடையே போட்டி இருக்கும். விளையாட்டு வீரர்களாக நீங்கள் அழுத்தத்தில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சிப்பீர்கள். எனவே இப்போட்டியில் இந்தியா வெல்லும் என்று நான் நம்புகிறேன். ஒருவேளை முடிவு நமக்கு சாதகமாக வரவில்லை என்றாலும் இந்திய அணியினர் ஏற்கனவே இத்தொடரில் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி நாட்டை பெருமைப்படுத்தியுள்ளனர்” என்று கூறினார்.

Advertisement