ஹார்டிக் பாண்டியாவின் விலகலால்.. சூரியகுமார் யாதாவிற்கு அடித்த ஜாக்பாட் – வெளியான லேட்டஸ்ட் தகவல்

Pandya-and-SKY
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவடைய உள்ளது. இந்த மாபெரும் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அகமதாபாத் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கு அடுத்த சில தினங்களிலேயே ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்தியாவில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல், பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படும் என்று தெரிகிறது. இதன் காரணமாக இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் சமீப காலமாகவே டி20 கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த ஹார்டிக் பாண்டியா உலகக் கோப்பை தொடரின் போது காயமடைந்து வெளியேறியதால் அவரால் இந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரில் பங்கேற்க முடியவில்லை. இதன் காரணமாக இந்திய அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

பும்ரா ஏற்கனவே இந்திய அணிக்கு கேப்டன்சி செய்திருந்தாலும் அவருக்கும் இந்த டி20 தொடரில் ஓய்வளிக்கப்படலாம் என்று தெரிகிறது. அப்படி ஒருவேளை அவருக்கும் ஓய்வளிக்கப்பட்டால் நிச்சயம் இந்த இளம் வீரர்களை கொண்ட இந்திய அணிக்கு அதிரடி ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கிட்டத்தட்ட இந்த தகவல் உறுதி செய்யப்பட்டதாகவே கூறப்படுகிறது.

இதையும் படிங்க : உலககோப்பை தொடருக்கு பிறகும் ஹார்டிக் பாண்டியாவிற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு – விவரம் இதோ

மேலும் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்த இந்திய அணியில் சீனாவிற்கு சென்று ஏசியன் கேம்ஸ் தொடரில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றிய இந்திய அணியில் இடம் பிடித்திருந்த பல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. இப்படி ஹார்டிக் பாண்டியாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது சூரியகுமார் யாதவுக்கு இந்திய அணியின் கேப்டனாகவும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement