அப்பேற்பட்ட மாஸ் டீம் ஏன் மறுபடியும் விளையாடல என்பது மர்மமா இருக்கு – தோனியை மறைமுகமாக விமர்சித்த ஹர்பஜன்

Harbhajan Singh 2
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களுக்கு சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா 2011 போல இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் எம்எஸ் தோனி தலைமையில் லீக் சுற்றில் தென்னாப்பிரிக்காவை தவிர்த்து எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் வென்ற இந்தியா 28 வருடங்கள் கழித்து கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

worldcup

- Advertisement -

அந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் ஆகியோர் மிகச் சிறந்த தொடக்க வீரர்களாகவும் 3வது இடத்தில் கௌதம் கம்பீர் ஃபைனலில் 97 ரன்கள் விளாசி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அசத்தினார்கள். அதை விட 4வது இடத்தில் இளம் வீரராக விராட் கோலி தம்முடைய பங்காற்றிய நிலையில் 5வது இடத்தில் யுவராஜ் சிங் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் அசத்தலாக செயல்பட்டு தொடர் நாயகன் விருது வென்று வெற்றியில் பங்காற்றினார்.

புரியாத மர்மம்:
அதே போல் கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பது போல் சுரேஷ் ரெய்னா நாக் அவுட் போட்டிகளில் முக்கிய ரன்களை எடுத்த நிலையில் தொடர் முழுவதும் தடுமாறிய கேப்டன் தோனி ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்று சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்தார். மேலும் பந்து வீச்சுத் துறையில் ஜாம்பவான் ஜஹீர் கான், ஆசிஷ் நெஹ்ரா, முனாப் படேல் ஆகியோரும் சுழல் பந்து வீச்சு துறையில் ஹர்பஜன் சிங், அஸ்வின் ஆகியோரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் அபாரமாக செயல்பட்டு வெற்றியை உறுதி செய்தனர்.

Harbhajan Singh

ஆனால் அப்படிப்பட்ட 21ஆம் நூற்றாண்டின் தரமான இந்திய அணி 2011 உலகக் கோப்பைக்கு பின் ஒரு போட்டியில் கூட சேர்ந்தார் போல் விளையாடாதது தமக்கு இன்னும் புரியாத மர்மமாக இருப்பதாக ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. அதாவது உலக கோப்பையில் மட்டும் பயன்படுத்தப்பட்ட அந்த வீரர்கள் மீண்டும் ஒரு போட்டியில் கூட ஒன்று சேர்ந்து விளையாடாதது ஏன் என்பது எனக்கு மிகப்பெரிய மர்மமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது”

- Advertisement -

“அது அந்த காலத்திலேயே சரி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். குறிப்பாக உலகக் கோப்பையை வென்ற நாங்கள் மீண்டும் ஒரு போட்டியிலாவது விளையாடியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து ஒரு போட்டியில் கூட விளையாடாதது துரதிஷ்டவசமாகும்” என்று கூறினார். முன்னதாக 2011 உலகக் கோப்பைக்கு பின் சேவாக், ஹர்பஜன் போன்றவர்கள் வயது காரணமாக படிப்படியாக ஃபார்மை இழந்து சுமாராக செயல்பட்டனர்.

harbhajan 1

அதனால் கேப்டன் தோனி வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா, ஷிகர் தவான், அஸ்வின், புவனேஸ்வர் குமார், ரவீந்திர ஜடேஜா என இப்போது விளையாடும் வீரர்களுக்கு அப்போதே வாய்ப்பு கொடுத்து வளர்க்கத் துவங்கினார். ஆனாலும் உலகக் கோப்பையை வெல்வதற்கு உதவிய தம்மை போன்ற வீரர்கள் அத்தொடர் முடிந்ததுமே திடீரென சுமாரானவர்கள் என்ற வகையில் தோனி தலைமையிலான இந்திய அணி நிர்வாகம் கழற்றி விட்டதாக மறைமுகமாக விமர்சிக்கும் ஹர்பஜன் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:அதை பத்தி பேசவே பயமா இருக்கு, எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு காரணத்தை சொல்லுங்க – இளம் வீரர் வேதனை பேட்டி

“2011 உலக கோப்பையை வெல்லும் வரை மிகச் சிறப்பாக இருந்த அந்த அணியில் வென்றதும் திடீரென ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்தன. குறிப்பாக உலக கோப்பையை வெல்வதற்கு உதவிய வீரர்கள் திடீரென்று சிறப்பானவர்கள் அல்ல என்ற கோணத்தில் கழற்றி விடப்பட்டார்கள். அந்த அணியில் சில வீரர்களுக்கு அதுவே கடைசி உலக கோப்பையாக இருந்தாலும் சில வீரர்கள் இன்னும் சில வருடங்கள் விளையாடுவதற்கு தகுதியுடையவர்களாக இருந்தனர். ஆம் நாங்கள் வயதானவர்களாக இருந்தோம். ஆனால் அதன் பின்பும் அனுபவத்தால் சிறப்பாக விளையாடியிருப்போம்” என்று கூறினார்.

Advertisement