அதை பத்தி பேசவே பயமா இருக்கு, எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு காரணத்தை சொல்லுங்க – இளம் வீரர் வேதனை பேட்டி

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் 2024 டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்ற இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்றுள்ள நிலையில் பிரிதிவி ஷா’க்கு இடம் கிடைக்கவில்லை. 2018 அண்டர்-19 உலகக்கோப்பையை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் கால் தடம் பதித்த அவர் அறிமுக போட்டியிலேயே சதமடித்து சச்சின் டெண்டுல்கர் வீரேந்திர சேவாக், பிரையன் லாரா ஆகியோர் கடந்த கலவை என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டும் அளவுக்கு அசத்தினார்.

shaw 1

- Advertisement -

ஆனால் நாளடைவில் அதை தக்க வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு சுமாராக செயல்பட்ட அவர் பந்து லேசாக ஸ்விங்கானல் திணறுவதை வழக்கமாக வைத்திருந்தார். மேலும் சுமாரான ஃபிட்னஸ் கடை பிடித்ததால் அதிரடியாக நீக்கப்பட்ட அவர் உள்ளூர் தொடர்களில் போராடியும் தேர்வுக்குழு கண்டு கொள்ளவில்லை. இருப்பினும் கடந்த ரஞ்சிக் கோப்பையில் முச்சதம் அடித்து உடல் எடையை குறைத்து ஓரளவு ஃபார்முக்கு திரும்பிய அவர் கடந்த பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் தேர்வாகியும் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறவில்லை.

ஏமாற்றத்துடன் ஷா:
அந்த நிலையில் நிலையான இடத்தை பிடிப்பதற்கு ஐபிஎல் 2023 தொடரில் அசத்த வேண்டிய அவர் சுமாராக செயல்பட்டதால் கையில் கிடைத்த இந்தியனின் வாய்ப்பு மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கிடைக்காமல் வெகு தூரம் சென்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணியிலிருந்து நீக்கியதற்கான இதுவரை தேர்வுக்குழுவினர் தம்மிடம் தெரிவிக்கவில்லை என்று பிரிதிவி ஷா கூறியுள்ளார். மேலும் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டும் வாய்ப்பு கிடைக்காததை பற்றி பேசினால் பழி வாங்கி விடுவார்களோ என்ற பயத்திலேயே தற்போதெல்லாம் அமைதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட போது அதற்கான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. சிலர் அதற்கு ஃபிட்னஸ் காரணம் என்று தெரிவித்தனர். ஆனால் அதன் பின் நான் பெங்களூருவில் இருக்கும் என்சிஏவுக்கு சென்று சோதனைகளில் தேர்வாகி நல்ல ரன்கள் அடித்து மீண்டும் டி20 அணியில் கம்பேக் கொடுத்தேன். இருப்பினும் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியில் எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் ஏமாற்றமடைந்துள்ள நான் இதிலிருந்து நகர வேண்டியுள்ளது. ஏனெனில் இதற்காக நான் எதுவும் செய்ய முடியாது யாரிடமும் சண்டையும் போட முடியாது”

- Advertisement -

“ஒரு மனிதராக என்னைப் பற்றி நிறைய பேர் சொன்னாலும் நான் என்னுடைய விருப்பப்படி இருக்க விரும்புகிறேன். அதே சமயம் என்னைப் பற்றி தெரிந்தவர்களுக்கு நான் யார் என்று தெரியும். தற்போதயெல்லாம் எனக்கு எந்த நண்பர்களும் இல்லை. நானும் நண்பர்களை உருவாக்குவதில்லை. அது தான் இந்த தலைமுறையில் நடக்கிறது. அதாவது நீங்கள் உங்களுடைய எண்ணங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. அது எனக்கு பயத்தை கொடுக்கிறது என்று சொல்வேன்”

shaw

“அதாவது என்னுடைய எண்ணத்தை நான் பகிரும் போது அது சமூக வலைதளங்களில் வேறு விதமாக வந்து விடுகிறது. அதனால் தற்போது குறைந்த நண்பர்களை மட்டுமே வைத்துள்ள நான் அவர்களிடமும் அதிகமாக எதையும் பகிர்வதில்லை. மேலும் அடுத்ததாக நடைபெறும் தியோதர் கோப்பையில் வழக்கம் போல நான் விளையாட உள்ளேன். இந்த அத்தொடரில் விளையாடுவதற்கு அழைப்பு வந்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். மேலும் சமீப காலங்களில் நான் சிறப்பாக செயல்பட்டதாலயே அந்த தொடருக்கு என்னை அழைத்துள்ளார்கள் என்பது உங்களுக்கு புரியும். எனவே என்னால் ஏதாவது செய்ய முடியும் என்று தேர்வுக்குழுவினர் நினைப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க:அதை பத்தி பேசவே பயமா இருக்கு, எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு காரணத்தை சொல்லுங்க – இளம் வீரர் வேதனை பேட்டி

முன்னதாக இவரை விட சிறப்பாக செயல்படும் சர்பராஸ் கான், ரிங்கு சிங் போன்றவர்களுக்கே இந்திய அணியில் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டிலும் தடுமாற்றமாக செயல்பட்டு ஃபிட்னஸ் இல்லாமல் அவ்வப்போது நன்னடத்தையின்றி நடந்து கொள்வதாலேயே வெஸ்ட் இண்டீஸ் தொடர் மட்டுமன்றி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கூட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement