2003இல் நான் அந்த தப்பை பண்ணல, நீங்களும் பண்ணாதீங்க – தற்போதைய இந்திய அணி நிர்வாகத்தின் தவறை சுட்டிக்காட்டிய கங்குலி

- Advertisement -

வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை தங்களுடைய சொந்த மண்ணில் ஐசிசி நடத்தும் 2023 உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்ப ரசிகர்களிடம் காணப்படுகிறது. சொல்லப்போனால் கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா அதன் பின் கடந்த 10 வருடங்களாக நடைபெற்ற 3 வகையான ஐசிசி தொடர்களிலும் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டாலும் முக்கியமான நாக் அவுட் சுற்றில் சொதப்பி வெறும் கையுடன் வெளியேறி வருவதால் உச்சகட்ட விமர்சனங்களை சந்தித்துள்ளது.

எனவே வெளிநாடுகளில் தடுமாறினாலும் சொந்த மண்ணில் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் இந்தியா இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று ஐசிசி கிரிக்கெட் தொடர்களில் சந்தித்து வரும் தலைகுனியும் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. இருப்பினும் கேஎல் ராகுல் போன்ற சில முக்கிய வீரர்கள் இன்னும் காயத்திலிருந்து குணமடைந்து எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாமல் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கங்குலி அறிவுறை:
அதை விட ராகுல் டிராவிட் பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் சோதனை என்ற பெயரில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை ராகுல் டிராவிட் அடிக்கடி மாற்றங்களை செய்வது ரசிகர்களுக்கு கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது. இந்நிலையில் வெற்றி தோல்வி என்பதை தாண்டி ஒரு வருடத்திற்கு முன்பிலிருந்தே மாற்றங்களை செய்யாமல் இருந்தால் தான் அணி நன்கு செட்டிலாகி உலக கோப்பையை வெல்ல முடியும் என முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

அதை பின்பற்றியதாலேயே 2000 – 2003 வரையிலான காலகட்டங்களில் தமது தலைமையிலான இந்திய அணி வெற்றி நடை போட்டதாக தெரிவிக்கும் அவர் அணி நிர்வாகம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நாங்கள் செட்டிலான கலவையைக் கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் நாங்கள் நல்ல அணியாக இருந்ததால் தொடர்ச்சியாக வெற்றி பெற துவங்கினோம். எங்களிடம் சில நல்ல வீரர்களும் இருந்தனர். அதனால் தான் பெரிய தொடருக்கு முன்பாக அடிக்கடி மாற்றங்களை செய்யாதீர்கள் என்று நான் எப்போதும் சொல்வேன்”

- Advertisement -

“குறிப்பாக 11 வீரர்களை 1 வருடத்திற்கு வெற்றி தோல்வி என்பதை தாண்டி தொடர்ந்து ஒன்றாக விளையாட வைத்து ஒரே அணியாக உருவாக்க வேண்டும். 1999 – 2003 வரையிலான காலகட்டங்களில் ஆஸ்திரேலியா அதை பின்பற்றியதாலேயே வெற்றிகரமாக செயல்பட்டார்கள். நாங்களும் அதைப் பின்பற்றி 2003இல் வென்றோம். குறிப்பாக நியூசிலாந்தில் கடினமான பிட்ச்சில் நடைபெற்ற தொடரை தவிர்த்து வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற தொடரையும் நாட்வெஸ்ட் கோப்பையும் வென்றோம்”

இதையும் படிங்க: இதான் ரோஹித்துக்கு கடைசி உ.கோ, அவர் வெற்றியுடன் விடைபெற நீங்க பாடுபானும் – 2 நட்சத்திர வீரர்களுக்கு கங்குலி கோரிக்கை

“அதே போல தென்னாப்பிரிக்காவிலும் வென்ற நாங்கள் நல்ல அணியை கொண்டிருந்தோம். எனவே இந்த ஆசிய கோப்பையில் விளையாடும் 14 – 15 வீரர்கள் உலக கோப்பையிலும் விளையாடுவது மிக முக்கியமாகும். அந்த வகையில் உங்களுடைய அணியின் கலவையை தெரிந்து கொள்வதே வெற்றிக்கான ரகசியமாகும். அதை விட்டுவிட்டு கடைசி நிமிடம் வரை அடிக்கடி மாற்றங்களை செய்தாதீர்கள்” என்று கூறினார்.

Advertisement