இதான் ரோஹித்துக்கு கடைசி உ.கோ, அவர் வெற்றியுடன் விடைபெற நீங்க பாடுபானும் – 2 நட்சத்திர வீரர்களுக்கு கங்குலி கோரிக்கை

Ganguly
- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் நிறைவு பெற உள்ளது. அதில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக வரும் உலகின் இதர அணிகளுக்கு சவாலை கொடுத்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்த தொடரில் இந்தியா வெற்றி காண்பதற்கு பேட்டிங் துறையின் இரட்டை குழல் துப்பாக்கிகளாக கருதப்படும் முன்னாள் இந்நாள் கேப்டன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக செயல்படுவது அவசியமாகிறது.

அதில் விராட் கோலியாவது தன்னுடைய 23 வயதிலேயே 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் இடம் பிடித்து வெற்றிகளில் முக்கிய பங்காற்றி சாம்பியனாக சாதனை படைத்துள்ளார். ஆனால் 2011 உலகக்கோப்பை வென்ற அணியில் இடம் பிடிக்காத ரோஹித் சர்மா 2015, 2019 உலகக் கோப்பைகளில் இந்தியா தோல்வியை சந்தித்ததால் இதுவரை சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. குறிப்பாக 2019 உலகக்கோப்பையில் 5 சதங்கள் அடித்து அபாரமாக போராடியும் நாக் அவுட் சுற்றில் சொதப்பியதால் வெற்றி காண முடியாத அவர் தற்போது கேப்டனாக சொந்த மண்ணில் வழி நடத்தும் பொன்னான வாய்ப்பை பெற்றுள்ளார்.

- Advertisement -

கங்குலியின் கோரிக்கை:
எனவே தற்போது 36 வயதாகும் அவர் 2027இல் நடைபெறும் அடுத்த உலகக் கோப்பையில் 40 வயதை தொட்டு விடுவார் என்பதால் இந்த கடைசி முயற்சியில் கேப்டனாக அபாரமாக செயல்பட்டு கோப்பையை வென்று சாம்பியனாக விடை பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ஹிட்மேன் ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் ரோகித் சர்மாவுக்கு இதுவே கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கணித்துள்ளார்.

எனவே அவர் வெற்றியுடன் சாம்பியனாக விடை பெறுவதற்கு விராட் கோலியுடன் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் சுப்மன் கில்லும் இத்தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்ளும் கங்குலி இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு. “விராட் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த சில மாதங்களாகவே நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தும் அவர் இந்த உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவுடன் இந்தியாவின் வெற்றியை தீர்மானிப்பவர்களில் ஒருவராக இருப்பார்”

- Advertisement -

“ரோஹித் ஒரு கேப்டனாக தன்னுடைய முதல் மற்றும் கடைசி உலகக் கோப்பையில் களமிறங்குகிறார். அதாவது நான் 4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை பற்றி பேசுகிறேன். அவர் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் விளையாடுவார். கடந்த உலக கோப்பையிலும் அவர் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக ஒரு உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடிப்பது மகத்தான சாதனையாகும்”

இதையும் படிங்க: பும்ரா இல்ல, ஆசிய கோப்பையில் அந்த இந்திய பவுலரை எதிர்கொள்ள பாபர் அசாம் கஷ்டப்படுவாரு – முகமது கைப் நம்பிக்கை

“கடைசியாக இந்தியா மற்றும் வெற்றிக்கு இடையே நிற்கும் மற்றொரு வீரரில் ஒருவராக சுப்மன் கில் இருப்பார. எனவே இந்த தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டுமெனில் இந்த 3 வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement